ஏற்ற காலத்தின் ஆவிக்குரிய ஆகாரம் SPIRITUAL FOOD IN DLE SEASON 65-07-18E பிரான்ஹாம் கூடாரம்,ஜெபர்ஸன்வில், இந்தியானா நம்பிடுவாய், நம்பிடுவாய் எல்லாம் கைகூடிவிடும் நம்பிடுவாய் இந்த விதத்தில் எப்படியிருக்கும் பாருங்கள் நம்பிடுவேன் நம்பிடுவேன் எல்லாம் கைகூடிடும் நம்பிடுவேன் நாம் இப்போது நம் தலைகளை வணங்கியவர்களாக நின்ற வண்ணம் இருப்போம். 1. கர்த்தாவே, இது ஒரு பாடலாக மாத்திரம் அல்லாமல் "நம்பிடுவேன்” என்று பாடும் எங்கள் இருதயத்தின் மகா ஆழமாக இது இருக்கட்டும். சீஷர்கள் ஒரு முறை, இயேசு அநேக மகத்தான காரியங்கள் செய்த பிறகு, "கர்த்தாவே, இப்போது நாங்கள் விசுவாசிக்கிறோம்” என்றார்கள். "நீங்கள் என்னை விசுவாசிக்கிறீர்களா?” என்று இயேசு கேட்டார். 2. "நீர் எல்லாக் காரியங்களையும் அறிந்திருக்கிறீர் என்றும் ஒருவனும் உமக்கு போதிக்க வேண்டுவதில்லையே என்றும் நாங்கள் விசுவாசிக்கிறோம்” என்று அவர்கள் கூறினார்கள். ஆகவே பிதாவே, எங்களுடைய போதனை உமக்குத் தேவையில்லை என்று இந்த இரவு வேளையில் நாங்கள் உணர்கிறோம். ஆனால் உம்முடைய போதனை எங்களுக்கு அவசியமாக இருக்கின்றது. ஆகவே நாங்கள் எப்படி ஜெபிக்க வேண்டும் என்றும், எப்படி ஜீவிக்க வேண்டும் என்றும், எப்படி விசுவாசிக்க வேண்டும் என்றும் நீர் எங்களுக்கு போதிக்க வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். இந்த இரவு ஆராதனை மூலமாக அதைத் தந்தருளும். கர்த்தாவே, எங்களிடத்தில் ஏதாவது இல்லாதிருக்குமானால், அதைத் தந்தருளும். கர்த்தாவே, இயேசுவின் நாமத்திலே கேட்கிறோம். ஆமென். 3. உங்களில் அனேகர் இன்றிரவும் நின்று கொண்டிருக்கிறீர்கள் என்று நான் அறிவேன். வெளியே கும்பலாக இருந்த சிலரை சந்தித்தேன். அவர்களால் உள்ளே வரமுடியவில்லை என்றும் ஆகவே அங்கங்குள்ள கார்களில் இருக்கும் ரேடியோக்கள் மூலம் செய்தியை கேட்பதாகவும் கூறினார்கள். இன்றிரவு ஆராதனையை துரிதமாக முடிக்க முயற்சிக்கிறோம். ஞாயிறு இரவு சுகவீனமாக இருப்பவர்களுக்காக ஜெபிக்க ஏற்பாடு செய்வோம். இங்கு ஜெபிப்பதற்காக வரிசை இங்கு ஒழுங்கு செய்யலாம். ஆனால் இன்றிரவு இந்த ஆராதனையை நோயாளிகளுக்காக ஜெபிப்பதற்காக ஒப்புக் கொடுக்கிறோம். 4. நீங்கள் தேவனுடைய பரிசுத்தமான வார்த்தையிலே விசுவாசமுள்ளவர்களாய், இந்த மணி நேரத்திற்குரிய விசுவாசத்திலே கூட்டிக் கட்டப்பட்டு வளர வேண்டுமென்று நான் விரும்புகிறேன். விசுவாசம், எந்தக் காலத்திலும் இருந்திராத அளவு, அதிகமான விசுவாசம் தேவையாக இருக்கிறது. ஏனெனில் அது எடுத்துக் கொள்ளப்படுதலுக்குரிய விசுவாசமாக இருக்கிறது. ஆகவே நீங்கள் பார்த்த எல்லாவற்றிலும், கேட்ட எல்லாவற்றிலும், உங்கள் காதுகள் கேட்க பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையிலும், நீங்கள் காணத்தக்கதாக நிறைவேறின அடையாளங்கள், அற்புதங்கள் எல்லாவற்றிலும் உங்களுக்கு விசுவாசம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இவைகள் எல்லாவற்றையும் உங்கள் இருதயத்தில் சேர்த்து வைத்து இவைகள் எல்லாம் தேவனால் உண்டானவையோ, அல்லவோ என்று நீங்கள் நிதானித்துப் பாருங்கள். 5. முற்காலத்தில் எலியா, "கர்த்தர் தெய்வமானால் அவரைத் தொழுது கொள்ளுங்கள்" என்று சொன்னது போல, கிறிஸ்தவருக்கு இயேசு எல்லாவற்றிற்கும் மையமாக இருப்பாரானால் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவரையே பற்றிக் கொள்ள வேண்டும் என நான் கருதுகிறேன். அவரே மையமாக இருக்கிறார். அவரே வடதுருவ நட்சத்திரமாக இருக்கிறார். அவரே முடிவாக இருக்கிறார். அவரே பூரணராக இருக்கிறார். அவர் வடதுருவ நட்சத்திரமாக இருப்பாரானால்..... ஒரே ஒரு பொருள் தான் வடதுருவ நட்சத்திரத்தை சுட்டிக் காட்டும். அதுதான் நீங்கள் கப்பலில் பயணம் செய்யும் போது உங்களோடு கொண்டு செல்லும் திசைக்காட்டும் கருவி (Compass) கப்பலில் செல்லும் போது உங்களோடு நீங்கள் கொண்டு செல்ல வேண்டும் என நான் விரும்பும் திசைக்காட்டும் கருவி வார்த்தையே. வார்த்தை எப்போதும் அவரையே சுட்டிக் காட்டுகிறது. 6. மிகுந்த துன்பங்களும் போராட்டங்களும் நிறைந்த நாட்களில் நாம் இருப்பதாக உணர்கிறோம். தேசங்களுக்கிடையே துன்பமும், குழப்பமும் நிறைந்திருக்கின்றன. இன்னும் பல காரியங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. சில நேரங்களில், எங்கு எதை பார்த்தாலும், நான் கடலில் கப்பலில் இருப்பதை போல உணர்கிறேன். படகை நடத்தும் பொறுப்பு எனக்கு தரப்பட்டிருக்கிறது. நாம் எப்படி கடந்து செல்லப் போகிறோம்? என் கப்பலைக் காட்டிலும் நூறு மடங்கு பெரிதான வெண்தொப்பி அணிந்தாற் போல் அலை ஒன்று எதிரே வருகிறது. ஆனாலும் நாம் ஒவ்வொருவரும் அதை மேற்கொள்வோம். நாம் அவர் மூலமாக ஜெயம் கொள்கிறவர்களாக இருக்கிறோம். கப்பலின் தலைவன் - பிரதான தலைவன் - கப்பலின் ஒரு முனையிலுள்ள கம்பியைப் பிடித்திருக்கிறார். அவர் அதைப் பிடித்து இழுப்பார். அவை ஒவ்வொன்றையும் நாம் மேற்கொள்வோம். 7. இன்றிரவு துரிதமாக முடித்து சீக்கிரமாகவே உங்களை அனுப்பி விடுகிறோம். வெகு தூரத்திலிருந்து நீங்கள் காரோட்டி வந்திருப்பதையும், எவ்விதமாக, எவ்வளவு தியாகம் செய்து நீங்கள் கார் ஓட்டி வந்திருக்கிறீர்கள் என்பதையும் உணர்ந்து உங்களை பாராட்டுகிறோம். பாருங்கள். அது என்னை நான் எங்கு நின்று பேச வேண்டுமோ, என்னால் இயன்ற உதவி செய்ய முடியுமோ அதை செய்ய வைக்கிறது. நான் இங்கு இருக்கும் போது நாமிருக்கும் அந்த நேரத்திற்குரிய உதவியை என்னால் இயன்ற அளவு செய்ய மிகவும் பிரயாசப்படுகிறேன். (இங்கு தீர்க்கதரிசி செய்தியைக் குறிப்பிடுகிறார். தமிழாக்கியோன்.) நீங்கள் மக்களுக்கு ஒரே சமயத்தில் அதிகமாகத் தந்தால் அவர்கள் அதை மறந்து விடுவார்கள். நீங்கள் ஒரு காரியத்தை மாத்திரம் எடுத்துக் கொண்டு அதை அவர்கள் காணும் மட்டுமாக அதைப் பற்றிக் கொண்டிருங்கள். அதை அவர்கள் தங்கள் இருதயங்களில் பதிய வைத்துக் கொண்ட பிறகு வேறு காரியத்தைக் குறித்து போதியுங்கள். நாம் போவது போல படிப்படியாக செல்ல வேண்டும். 8. ஜெபியுங்கள், தைரியமாக இருங்கள். இன்றிரவு சுகமளித்தலை நம்புங்கள். நாம் எந்தக் காலத்தில் ஜீவிக்கிறோம் என்பதைக் குறித்து உங்கள் உள்ளத்தில் ஏதாவது சந்தேகம் இருக்கும் என நான் நினைக்கவில்லை. தேவன் தம்முடைய ஜனத்தின் மத்தியில் இருக்கிறாரா, இல்லையா என்பதைக் குறித்து உங்கள் உள்ளத்தில் ஏதாவது சந்தேகம் இருக்கும் என நான் நம்பவில்லை. அவை எல்லாவற்றையும் நீங்கள் விசுவாசிக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். அதைக் குறித்து என் உள்ளத்தில் ஒரு சந்தேகமும் இல்லை. என் ஜனங்கள் (என் நண்பர்கள், கிறிஸ்துவின் நண்பர்கள். கிறிஸ்துவின் பிள்ளைகள்) அதை விசுவாசிக்கிறார்கள் என்று நான் அறிவேன். 9. தேவனிடத்திலிருந்து ஒரு செய்தியை நீங்கள் பெற்று, அதை மக்களுக்கு அளித்து, அதை மக்கள் ஏற்றுக் கொள்வதைக் காணும் போது அது எனக்குப் பெரிய சந்தோஷத்தை தருகிறது. பிறகு நீங்கள் திரும்பி, "பிதாவே, உமக்கு ஸ்தோத்திரம்” என்று கூறுகிறீர்கள். ஓ பிள்ளைகள் அவர்களுக்காக அனுப்பப்பட்ட அப்பத்தை சாப்பிடுவதைக் காணும்போது எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கிறது சில வருஷங்களுக்கு முன்பு இந்த கூடாரத்தில் தரப்பட்ட ஒரு தரிசனமாக அது இருந்ததை உணர்கிறீர்களா? "ஜீவ அப்பம்" என்பது சரிதான். சகோ. நெவில் அவர்களே, அதை நினைவு கூறுகிறீர்களா? மகத்தான நேரம். 10. வேதம் வாசிப்பதை நீங்கள் கவனிக்க விரும்பினால் அல்லது குறித்துக் கொள்ள விரும்பினால் இப்போது (வேதத்தை) திருப்புவோம். தேவனுடைய வார்த்தையை வாசிக்காமல், சில விளக்கங்கள் தந்து ஆராதனை நடத்துவது தான் முறை என்று என்னால் நம்ப முடியவில்லை அது சுகமளிக்கும் ஆராதனையானாலும் அல்லது எதுவானாலும் சரி. நாம் எல்லோரும் புரிந்து கொள்கிறோம். நமக்குள் அந்நியர் யாரும் இல்லை என்று நான் எண்ணுகிறேன். ஆனால் நாமெல்லாரும் சுகமளித்தல் என்றால் என்ன என்பதை புரிந்துக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு யாரோ ஒருவர் செய்கிற காரியமாக அது இல்லை. அது தேவன் ஏற்கனவே செய்து முடித்ததாக இருக்கிறது. இரட்சிப்பும் அதே விதமாக இருக்கிறது. ஒரே ஒரு காரியம் என்னவென்றால், அதுவே தான் சத்தியம் என்று மக்கள் விசுவாசிக்கும்படியாக செய்ய வேண்டும். மேலும் தேவன் அதை அவருடைய வார்த்தையில் போதிக்கிறார். பிறகு அதை விசுவாசிக்கிறவர்களுக்கு நிரூபிக்கிறார். ஏனென்றால், "விசுவாசிக்கிறவர்களுக்கு எல்லாம் கூடும்” என்று அவர் கூறியிருக்கிறார். 11. "தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை ” என்று நீங்கள் கூறுகிறீர்கள். அதை விசுவாசிக்கிறீர்களா? உங்களாலும் கூடாத காரியம் ஒன்றுமில்லை. ஏனெனில் "விசுவாசிக்கிற அவர்களுக்கு, (தேவன் ஒருவராய் இருக்கிறார்) "அவர்களுக்கு எல்லாம் கூடும்” பாருங்கள். நீங்கள் விசுவாசித்தால் மட்டும் போதும், உங்களாலும் கூடாத காரியம் ஒன்றுமில்லை . 12. கர்த்தருக்கு சித்தமானால் இப்போது 2இராஜாக்கள் 17-ம் அதிகாரத்தில் முதல் ஏழு வசனங்களை வாசிக்க விரும்புகிறேன். கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி என வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்றான். பின்பு கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று. அவர், நீ இவ்விடத்தை விட்டுக் கீழ்த்திசையை நோக்கிப் போய் யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக் கொண்டிரு. அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய், அங்கே உன்னைப் போஷிக்க, காகங்களுக்குக் கட்டளையிடுவேன் என்றார். (கவனியுங்கள், "அங்கே உன்னைப் போஷிக்க. "வேறு எந்த இடத்திலோ அல்ல "அங்கே ") அவன் போய், கர்த்தருடைய வார்த்தையின் படியே யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையிலே தங்கியிருந்தான். காகங்கள் அவனுக்கு விடியற்காலத்தில் அப்பமும் இறைச்சியும், சாயங்காலத்தில் அப்பமும் இறைச்சியும் கொண்டு வந்தது தாகத்திற்கு அந்த ஆற்றின் தண்ணீரைக் குடித்தான். தேசத்திலே மழை பெய்யாதபடியினால், சில நாளுக்குப் பின்பு அந்த ஆறு வற்றிப் போயிற்று. 13. கர்த்தர் அவருடைய வார்த்தையை வாசித்ததற்கு அவருடைய ஆசீர்வாதங்களைக் கூட்டுவாராக. இன்றிரவு, இதிலிருந்து "காலத்திற்குரிய ஆவிக்குரிய ஆகாரம்” எனும் பாடத்தை எடுக்க விரும்புகிறேன். இன்று காலை "... தேவனுக்கு ஒரு ஊழியம் செய்தல்” என்பதன் பேரில் ஒரு பாடம் பெற்றோம். (உரைக்கப்பட்ட வார்த்தை வால்யூம் 4, நம்பர் 8 - பதிப்பாசிரியர்) அல்லது தகுந்த நேரமாய் இராமல், காலமாய் இராமல், இடமாய் இராமல், நபராய் இராமல் அவருக்கு ஒரு ஊழியம் செய்ய முயற்சித்தல் என்பது. இப்போது "ஏற்ற காலத்தின் ஆவிக்குரிய ஆகாரம்.” 14. இந்த தீர்க்கதரிசி எலியாவைக் குறித்து நாம் மிக குறைவாகவே அறிவோம். ஆனால் அவன் தேவனுடைய ஊழியக்காரன், அந்த மணி நேரத்திற்கான தேவ ஊழியக்காரன் என்று நாம் அறிவோம். 15. தேவன் எலியாவின் மீது தமது ஆவியை ஊற்றியிருக்கிறார். ஏற்கனவே மூன்று முறை இன்னுமாக இரண்டு முறை என்று வாக்குரைத்திருக்கிறார். ஐந்து முறை கிருபைக்காக. ஏலியாவின் மேல் ஊற்றியிருக்கிறார். எலிசாவின் மேல் இரண்டு மடங்காக அது வந்தது. யோவான் ஸ்நானகன் மீது இருந்தது. புறஜாதி மணவாட்டியில் முன்னோடியாக வர வேண்டியுள்ளது. யூதர்களை வீட்டிற்கு கொண்டு செல்ல மோசேயுடன் வர வேண்டும். அது சரிதான். எலியாவின் ஆவியை ஐந்து முறை உபயோகிப்பதாக தேவன் வாக்களித்திருக்கிறார். மூன்று முறை ஏற்கனவே செய்து முடித்து விட்டார். 16. இந்தப் பெரிய தீர்க்கதரிசி எங்கிருந்து வந்தான் என்று நமக்கு தெரியாது. அவன் ஒரு திஸ்பியன் என்று நாம் அறிவோம். ஆனால் எப்படி வந்தான்?........ 17. தீர்க்கதரிசிகளைப் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது. அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பதும் தெரியாது. ஸ்தாபனத்திலிருந்து வந்ததான ஒரு தீர்க்கதரிசியையோ அல்லது அவனுக்குப் பின்னான வம்ச வரலாறு இருப்பதாகவோ நான் அறிந்ததில்லை . தீர்க்கதரிசியானவன் பயமே இல்லாத, ஒரு சாதாரண மனிதன் பெரும்பாலும் படிக்காதவன். அவர்கள் எதையும் எழுதி வைப்பதில்லை . ஏசாயா. எரேமியா ஆகிய இந்த இரண்டு பேரும் கொஞ்சம் எழுதி வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்தப் பெரிய மனிதன் எலியா ஒன்றையும் எழுதி வைக்கவில்லை. அவர்களில் பெரும்பாலானவர்கள் எழுதி வைக்கவில்லை. ஒரு வேளை அவர்கள் எழுத முடியவில்லை போலும். ஆனால் அவர்கள் வைராக்கியமுள்ள மனிதர்கள். இந்த முற்காலத்து தீர்க்கதரிசிகள் போல வேதத்திலே ஒரு மனிதனும் இல்லை. அவர்கள் ராஜ்ஜியங்களுக்கு ராஜாக்களுக்கு, மக்களுக்கு, சபைகளுக்கு மற்றும் எல்லாவற்றிற்கும் எதிர்த்து நின்று தேவனுடைய வார்த்தையில் உறுதியாய் நிலைத்து நின்றார்கள். தேவனும் அவர்கள் சொன்னதே சரி என்று உறுதிப்படுத்தினார். அவர்கள் மிகவும் வைராக்கியமுள்ள நபர்கள். 18. இந்த எலியா அவர்கள் எல்லாரிலும் மிகவும் வைராக்கியமுள்ளவர்களில் ஒருவனாக இருந்தான். அவன் வனாந்திரத்து மனிதனாய் இருந்தான். அவன் வனாந்திரத்திலிருந்து வந்தான். வனாந்திரத்தில் வாழ்ந்தான். அவன் மயிர் ஆடையைத் தரித்துக் கொண்டிருந்தான் என்றும், ஆட்டுத்தோலைப் போர்த்துக் கொண்டிருந்தான் என்றும், ஒரு தோல் துண்டு, அரையில் ஒரு ஒட்டகத் தோலை அணிந்திருந்தான் என்றும், முகமெல்லாம் முடி இருந்ததென்றும் வேதாகமம் கூறுகிறது. அவன் பார்ப்பதற்கு மிகவும் முரட்டுத்தனமாக காணப்படுபவனாக கற்பனை செய்து பார்த்தேன். 19. அவர்கள் எல்லாரும் மரிக்கவில்லை . அவர்கள் எல்லோரும் இறந்து போய் விடவில்லை. நிசாயா ஆலோசனை சங்கத்தின் நாட்களிலே...... உங்களில் அநேகர் சபையின் ஆரம்ப காலத்திய நிசாயா ஆலோசனை சங்கம்" என்பதைப் படித்திருப்பீர்கள். மற்ற எல்லா சபைகளையும் கலைத்து ஒன்றாக இணைத்து, ஒரு ஸ்தாபனமாக ஆக்கிக் கொள்ள அவர்கள் விரும்பினபோது அந்த நிசாயா ஆலோசனை சங்கத்தை நடத்தினார்கள். அப்போது எலியாவைப் போன்ற வைராக்கியமான மனிதன், மூலிகைகளை மாத்திரம் உண்பவன், வனாந்திரத்திலிருந்து உள்ளே வந்தான். மிகவும் வைராக்கியமுள்ள மனிதன். கான்ஸ்டன்டைனுக்குக் கீழான, கெளரவம் வாய்ந்தவர்கள், உயர்ந்தவர்கள் எல்லாரும் அவர்கள் குரலை அடக்கி விட்டனர். 20. அவர்கள் தீர்க்கதரிசிகளாய் இருந்ததினால், மணவாளனின் கோதுமை மணியானது நிலத்தில் விழ வேண்டும் என்பதைப் போலவே மணவாட்டி சபையின் கோதுமை மணியானது நிலத்தில் விழவேண்டியதாய் இருக்கிறது என்பதை அறிந்திருந்தார்கள். அங்கு அது ஆயிரம் வருஷங்களாக விழுந்திருந்தது. 21. ஆகவே தான் இந்நாட்களில் சிலர் புத்தகங்களிலே, "சிறு பிள்ளைகள் கொலை செய்யப்படுவதையும், ஸ்திரீகள் சிங்கங்களால் துண்டுகளாக பிய்த்துப் போடப்படுவதையும் பார்த்துக் கொண்டு, வானத்தில் அமர்ந்து கொண்டு இதைக் குறித்து ஒன்றும் சொல்லாமல் இருக்கும் அந்த மெளனமான தேவன் எங்கே?” என்று எழுதுகிறார்கள். அவர்களுக்கு கோதுமை மணியானது நிலத்தில் விழ வேண்டும் என்ற வார்த்தை தெரியாது. ஒரு நீதியுள்ள தேவன் எவ்விதம் நின்று கொண்டு தம் சொந்த குமாரன் மரிப்பதையும், துப்பப்படுவதையும், மற்றவர்களையும் பார்த்துக் கொண்டிருக்க முடியும்? ஆனால் வார்த்தையின்படி அவ்விதமாகவே நடக்க வேண்டும். இந்த மணி வேளையிலும் அது அவ்விதமாகவே இருக்கிறது. 22. இந்த மனிதன் பெரிய மனிதனாக இருந்தான். அவனுக்கு முன்பாக பாவம் நிறைந்த சந்ததி இருந்தது. ஆகாப் ராஜாவாக இருந்தான். அவன் தகப்பன் தீயவனாக இருந்தான். சாலமோனுக்குப் பிறகு அடுத்தடுத்து ஒரு பொல்லாத ராஜா இருந்து கொண்டிருந்தான். இருபத்திரண்டு ஆண்டு காலமாக சமாரியாவில் அரசாண்ட இந்த மனிதன் ஆகாப். அவர்கள் எல்லாரைக் காட்டிலும் மிகவும் மோசமானவனாக இருந்தான். அவன் ஒரு சரியான தற்காலத்து மனிதன். அவன் மெய்யாகவே மதத்தை விசுவாசித்தான். தற்காலத்து முறைப்படியே எல்லாவற்றையும் வைத்திருந்தான். நன்றாகப் படித்து பயிற்றுவிக்கப்பட்ட நானூறு எபிரேய தீர்க்கதரிசிகளை வைத்திருந்தான். தேவன் அவனிடத்தில் ஒருவனை அனுப்பினார். அவனை இவன் விசுவாசிக்கவில்லை. அவன்தான் எலியா. 23. ஆனால் திஸ்பியனான இந்த எலியாவோ வனாந்திரத்து மனிதனாக இருந்தான். பக்குவமான மனிதனாக இராமல் வைராக்கியமுள்ளவனாக இருந்தான். தேவன் பொறுத்துக் கொள்ளக் கூடாதபடி ஆகாப் ஒரு நாள் பாவம் செய்த போது அவர் வனாந்திரத்தில் எலியாவிடம் பேசினார். நான் அடிக்கடி சித்தரித்துக் காண்பித்தது போல, இதோ அவன் சமாரியாவின் பாதையில் வருகிறான். ஒரு வேளை முகத்தைச் சுற்றி வெண்தாடி மீசையோடும், சூரிய ஒளியில் பளபளக்கும் வழுக்கைத் தலையோடும், குறுகிய கண்களோடும், கையில் ஒரு தடியோடும், முகத்தில் புன்னகையோடும், இஸ்ரவேலின் ராஜாவுக்கு நேராக நடந்து சென்று, "நான் சொல்லும் வரை பனி கூட பெய்யாது” என்றான். 24. தேவனே, கர்த்தர் உரைக்கிறதாவது என்ற வார்த்தையை வைத்து என்ன செய்வது என்பதை அறிந்த மனிதனை எங்களுக்கு தந்தருளும். 25. அவன் இவ்விதம் செய்யும் முன்பாக தேவன் அவனை அழைத்தார் என்று நாம் பார்க்கிறோம். தேவன் அவனோடு பேசினதினால் அவன் எதற்கும் பயப்படவில்லை. அவன் தன் வார்த்தையின்படி நடக்காதோ என்று பயப்படவில்லை. அது நடக்கும் என்று அறிந்திருந்தான். அவன் அந்த மணி வேளைக்கான தேவனுடைய தீர்க்கதரிசி என்றும், அது கர்த்தருடைய வார்த்தையின்படியே இருக்கிறது என்றும் அறிந்திருந்தான். ராஜா அவனுடைய தலையை வெட்டுவதாக இருந்தாலும், அல்லது சிறையில் போடுவதாக இருந்தாலும் எதைச் செய்தாலும், அது அவனுக்கு அக்கரை இல்லை. ஏனெனில் ராஜாவுக்கு நேராக கர்த்தர் உரைக்கிறதாவது என்று சொல்லும் கட்டளையை அவன் பெற்றிருந்தான். எப்படிப்பட்ட வைராக்கியமுள்ள ஆசாமி. ஆனால் அவன் இந்தப் பெரிய பஞ்சத்தைக் குறித்து முன்னறிவிக்கும் முன்பாக...... 26. தேவன் பாவம் தண்டிக்கப்படாமல் விட்டு விடுவதில்லை. தண்டனை கண்டிப்பாக இருந்து தீர வேண்டும். தண்டனை இல்லாமல் சட்டம் இருந்து என்ன பயன்? விளக்கு எரிவது சட்ட விரோதமானது என்று சொல்லி விட்டு அபராதமோ அல்லது தண்டனையோ இல்லாவிட்டால் என்ன பிரயோஜனம்? அது சட்டமே அல்ல. ஆகவே பாவம் செய்தால் தண்டனை உண்டு. தேவன் ஒரு சட்டத்தைத் தரும்போது, அது மீறப்படும்போது அங்கு நிச்சயமாக தண்டனை இருக்க வேண்டும். 27. இந்த நாடானது அவருடைய எல்லா சட்டங்களையும் மீறி விட்டது. ஓ அவர்களுக்கு சபை இருந்தது. ஆலயம் இருந்தது. அநேக படித்த மனிதர்கள் இருந்தார்கள். தேசம் பூராவும் தீர்க்கதரிசிகள் இருந்தனர். அவர்களுக்கு பள்ளிக் கூடங்கள் இருந்தன. இயந்திரம் போல அவர்களை வெளியே அனுப்பிக் கொண்டிருந்தன. அநேக தீர்க்கதரிசிகள் இருந்தனர். அநேக ஆசாரியர்கள் இருந்தனர். அநேக வேத பாரகர்கள் இருந்தனர். அநேக மத சம்பந்தமான காரியங்கள் இருந்தன. ஆனால் அவர்கள் எல்லாரும் தேவனுடைய வார்த்தையை விட்டு தூரத்தில் இருந்தனர். ஆகவே தேவன் அவர்களுடைய இந்த தரத்தில் இல்லாமல் புறம்பே இருந்து ஒரு மனிதனை அழைத்து கர்த்தர் உரைக்கிறதாவது என்ற வார்த்தையோடு அவனை அனுப்பி வைத்தார். 28. தமக்கு சொந்தமானவர்களுக்காக அவர் எவ்வளவு அக்கரை கொள்கிறார் என்பதை கவனியுங்கள். இந்த தீர்க்கதரிசியை செய்தியுடன் அனுப்பும் முன்பாக, "எலியாவே, போய் இந்தக் காரியங்களை எல்லாம் ஆகாப் ராஜாவுக்கு அறிவி, அறிவித்து முடிந்தவுடன் அவனை விட்டுப் புறப்பட்டு தூர வந்து விடு. ஏனென்றால் பஞ்ச காலத்தின் போது நீ போகத் தக்கதாக ஒரு இடத்தை நான் ஆயத்தம் செய்திருக்கிறேன். எலியாவே, உன்னை நான் பாதுகாப்பேன். நீ என் வார்த்தையை சொல்வதென்றால் நீ செய்ய வேண்டியது இன்னதென்று நான் உனக்கு சொன்ன வண்ணமாகவே செய்” என்றார். 29. இந்த இரவு வேளையில் எலியாவையும், எலியாவின் வேலையையும் இந்த மகத்தான ஊழியத்தையும் நாம் ஜீவித்து கொண்டிருக்கும் இந்த நேரத்தோடு பொருத்திக் காட்டப் போகிறேன். அது ஒரு பரிபூரணமான பொருத்தம் என்று விசுவாசிக்கிறேன். தேசங்களைக் குறித்து யோசிக்கிறேன்... நாம் பின் நோக்கிப் பார்க்க நேரமிருந்தால் ஜெப வரிசைக்கு அதிக நேரம் ஒதுக்க விரும்புகிறேன். 30. நாம் பின்னோக்கிப் பார்ப்போம் என்றால், இந்த அமெரிக்க தேசத்தை எப்படி அடைந்தோமோ அதே அடிப்படையில் இஸ்ரவேல் மக்கள் பாலஸ்தீன தேசத்தை அடைந்ததைக் காண்கிறோம். நாம் இந்த அமெரிக்க தேசத்தில் வந்து இங்கு குடியிருந்த இந்தியர்களை விரட்டி விட்டு நாட்டை சுதந்தரித்துக் கொண்டோம். அவ்விதமாகவே இஸ்ரவேல் மக்களும் தேவனுக்குக் கீழாக, யோசுவாவின் தலைமையில் பாலஸ்தீனாவிற்கு வந்து அங்கு குடியிருந்தவர்களைத் துரத்தி விட்டு நாட்டை எடுத்துக் கொண்டார்கள். 31. அவர்களுடைய முதல் ராஜாக்கள் தாவீது, சாலமோன் போன்ற பெரிய மனிதர்கள் பராக்கிரமசாலியாக இருந்தார்கள். நம்முடைய முதல் ஜனாதிபதிகள் வாஷிங்டன், லிங்கன் போன்றவர்கள் பெரிய மனிதர்களாக இருந்தனர். பிறகு கடைசியாக ஜனாதிபதிகள் அல்லது ராஜாக்கள் எல்லாக் காலத்திலும் மோசமாகிக் கொண்டே வந்து இறுதியாக ஆகாப் ராஜாவில் முடிவடைந்தார்கள். நம்முடைய நாளைப் போலவே மிகவும் பொருத்தமாக இருக்கிறது. உண்மையான கர்த்தருடைய வார்த்தையைக் கேட்க விரும்பாத அளவுக்கு மக்கள் நவநாகரீகம் அடைந்து விட்டார்கள். 32. அப்படிப்பட்ட நாகரீகமடைந்த மக்களுக்கு ஒரு உண்மையான தேவ ஊழியக்காரன் எப்படிக் காணப்படுவான் என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்கலாம். "ஏன், அவன் பித்துப்பிடித்தவன், புத்தி சுவாதீனமில்லாதவன். அவ்விதமான காரியம் ஒன்றுமே இல்லை” என்பார்கள். அவர்கள் மார்க்க பக்தியுள்ளவர்கள். மிகவும் மார்க்க பக்தியுள்ளவர்கள். அவர்களுக்கு உத்தமமான மக்கள் இருந்தனர். அவர்கள் மிகவும் மார்க்க பக்தியுடையவர்கள். 33. ஒரு சாதாரண வேத அறிவைக் காட்டிலும், ஒரு சாதாரண செய்தியைக் காட்டிலும், வார்த்தையை போதிப்பதைக் காட்டிலும், அவர்களுடைய கல்லான இருதயங்களை உடைப்பதற்கு அதற்கும் மேலான ஒன்று தேவைப்படும் என்று அவன் அறிந்திருந்தான். அந்த மக்கள் மீது நியாயத் தீர்ப்பை அனுப்பும் படியாக கர்த்தர் உரைக்கிறதாவது என்ற செய்தியே தேவைப்பட்டது என்பதை அவன் அறிந்திருந்திருந்தான். அதை அவன் கர்த்தர் உரைக்கிறதாவது என்ற வார்த்தையோடு சென்ற போதே அறிந்திருந்தான். கர்த்தர் உரைக்கிறதாவது என்பதே, அதுதான் நியாயத் தீர்ப்பு என்று உணர்த்துகிறதாக இருந்தது. நாம் அதை இந்த நாளிலும் பார்க்கிறோம். நாம் அதை எந்த நாளிலும் பார்க்கிறோம். நீங்கள் இரக்கத்தின் எல்லையைக் கடந்து செல்லும் போது நியாயத் தீர்ப்பே அன்றி வேறொன்றும் விடப்படுவதில்லை. 34. எலியாவோடு நான் ஒப்பிட்டுக் காட்டப்போவது இந்நாளில் உள்ள சபையையே நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இந்த செய்தியை அவன் பெற்றுக் கொண்டான். தேவனுடைய வார்த்தையின் படி மூன்று வருஷமும் ஆறு மாதமும் அல்லது எலியா சொல்லும் மட்டுமாக மழை பெய்யாது என்பதால் அவனுடைய இயற்கையான உணவிற்காக எலியா அக்கறைக் கொள்ளப்பட்டான். "எலியாவே, எந்த நேரத்தை நீ சொல்கிறாயோ அது அப்படியே ஆகும்,” ஆகவே அவன் ராஜாவிடம் சென்று, "நான் சொல்லுமளவும் பணி கூட விழாது” என்று சொன்னான். அது ஒரு பெரிய செய்தி அல்லவா? 35. இப்போது நாம் அதை இந்நாளில் நிலவும் ஆவிக்குரிய பஞ்சத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கப் போகிறோம். ஆவியின்படி பேசுவோமானால், இந்நாளில் ஒரு பெரிய ஆவிக்குரிய வறட்சி இருப்பதை நாம் அறிந்திருக்கிறோம். தீர்க்கதரிசிகளால் அது முன்னுரைக்கப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்பாக, "தேசத்திலே பஞ்சம் உண்டாயிருக்கும். வெறும் ஆகாரத்திற்காக அல்ல. தேவனுடைய வார்த்தையைக் கேட்க இயலாத பஞ்சம்” என்று கூறியிருக்கிறார்கள். அந்த நாள் இதுவே, "தேவனுடைய உண்மையான வார்த்தையைக் கேட்பது.” இயற்கையான அந்த பஞ்சம் இந்த ஆவிக்குரிய பஞ்சத்திற்கு நிழலாகவும் சாயலாகவும் இருக்கிறது. 36. பாவமும் அவிசுவாசமும், சபையில் உள்ள கள்ள போதகர்களாலும் நாகரீக பிரசங்கிகளாலும் வரப்போகும் நியாயத்தீர்ப்புக்கு இடமளித்து விட்டன. அவர்கள் தேவனுடைய வார்த்தையையும் அவருடைய தீர்க்கதரிசியையும் விட்டு விலகி, அவருடைய வார்த்தைக்கு வேதியல் விளக்கத்தை நாடிப் போகிறார்கள். 37. சரியாக அந்த சமயத்தில் தானே தேவன் ஒன்றை எழுப்புகிறார் என்பதைக் கவனித்தீர்களா? ஏனென்றால் அவர் எப்போதும் தன் ஊழியர்களுக்கு தெரிவிக்காமல் முதலில் மக்களுக்கு எதையும் தெரிவிப்பதில்லை . 38. இந்த நேரத்தில் எலியா தேவன் அவன் போகும்படியாக ஆயத்தம் பண்ணியிருந்த ரகசியமான இடத்தை உடையவனாக இருந்தான். அதைத் தான் நாம் இப்போது ஜெபத்திற்கு (Prayer Line) முன்பாக காண விரும்புகிறோம். தேவனே ஆயத்தம் பண்ணியிருந்த ரகசிய இடத்தை எலியா உடையவனாக இருந்தான். சபை அவனுக்காக அதை ஆயத்தம் பண்ணவில்லை. ராஜா அவனுக்காக அதை ஆயத்தம் பண்ணவில்லை. தனக்காக அவனே ஆயத்தம் பண்ணவில்லை. ஆனால் தேவனே எலியாவுக்காக ஒரு ரகசிய இடத்தை ஆயத்தம் பண்ணினார். வறட்சி காலத்தில் அவன் போஷிக்கப்படுவதற்காக அங்கே அவனுக்கு தினமும் ஆகாரம் தரப்பட்டது. நாளைய தினத்தில் என்ன நடக்குமோ என்று அவன் கவலைப்படத் தேவையில்லை. அல்லது சுத்தமாக ஆகாரம் தீர்ந்து விடுமோ என்று கவலைப்படத் தேவையில்லை. தேவன் சொன்னார். "நான் காகங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறேன். அவைகள் உன்னை போஷிக்கும்” என்ற அற்புதமான ஒரு காரியம். கிறிஸ்துவுக்குள் நமக்கிருக்கும் ரகசிய இடத்தை குறித்த ஒப்புமை. 39. இந்நாட்களில் உலக சபை சங்கம் (World Church Council) சொல்லுகிறது என்னவென்றால், "அற்புத அடையாளங்களின் நாட்கள் கடந்து போய் விட்டன. தேவனுடைய மகத்தான வல்லமையானது சபைகளை விட்டு எடுக்கப்பட்டு விட்டது. அவை "சத்தமிடுகிற வெண்கலம் போலவும் ஓசையிடுகிற கைத்தாளமும்” அல்லாமல் வேறொன்றுமில்லை என்று சொல்லும் அளவிற்கு காணப்படுகிறது. அது உண்மை என்று நாம் அறிந்திருக்கிறோம். "தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்துக் கொண்டு அதன் பெலனை மறுதலிக்கிறவர்கள்.” 40. அதே காரியத்தைத் தான் தாவீது செய்தான் என்று காலையில் பார்த்தோம். மாட்டு வண்டியைக் கொண்டு வார்த்தையைக் விட்டு விலகிச் சென்றான். வார்த்தை அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட போது அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதை விட்டு விலகியே போய் விட்டார்கள். 41. எலியாவின் நாட்களிலும் அந்த மக்கள் வார்த்தையை விட்டு விலகிப் போனார்கள். வார்த்தையை அவர்கள் பெற்றிருந்ததாக நினைத்தார்கள். ஆனால் அவர்கள் அதைப் பெற்றிருக்கவில்லை. 42. ஆகவே கவனியுங்கள். அவிசுவாசியை அவர் தண்டிக்க இருந்த நாட்களில் விசுவாசிக்கு அவர் ஒரு வழியை ஏற்படுத்தினார். அதே காரியத்தையே அவர் ஒவ்வொரு முறையும் செய்கிறார். ஜலத்தைக் கொண்டு உலகத்தை அவர் அழித்த நாட்களில் தப்பிக்கும்படியான வழியை அவர் நோவாவுக்கு ஏற்படுத்தினார். எகிப்தின் இராணுவத்தை அவர் தண்ணீரில் மூழ்கடித்த நாட்களில், அவருடைய ஜனங்கள் தப்பித்துக் கொள்ளும்படியான வழியை கடல் வழியாக ஏற்படுத்தித் தந்தார். தேவன் எப்படி அவர் வழியை ஏற்படுத்துகிறார். பாருங்கள். வழியே இல்லாத இடத்தில் அவரே அந்த வழியாக இருக்கிறார். அவரே அந்த வழியாக இருக்கிறார். ஆமென்.... 43. சரித்திரத்தின் மகத்தான நேரங்களில் ஒன்றை நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்கிறோம். நாம் பயப்பட வேண்டியது பளபளப்பான ஏவுகணைகளைக் கொண்ட போர் ஆயுதங்களைக் குறித்து அல்ல, சபைகளைக் குறித்தே நாம் பயப்பட வேண்டும். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். 44. கவனியுங்கள்.... எலியா தப்பித்துக் கொள்ள தேவன் ஒரு வழியை ஏற்படுத்தினார். கோபாக்கினைக்கும், வரப்போகும் மற்ற காரியங்களுக்கும் தப்பித்துக் கொள்ளும்படியாக, அவருடைய விசுவாசிக்கும், பிள்ளைகளுக்கும் ஒரு வழியை அவர் இப்போது ஏற்படுத்தியிருக்கிறார். ஆமென். 45. ஏனென்றால் தேவன் அந்த ஜனங்களை நியாயத் தீர்த்து அவர்களுக்கு தண்டனையளித்து, சோதோம் கொமாராவை தண்ணீரில் மூழ்கடித்து, கப்பர்நகூமை நடுக்கடலில் மூழ்க வைத்து, சோதோம் கொமாரைவையும் அந்த சந்ததிகளையும் அழித்து விட்டு, பின்னர் அதே காரியங்களை நாம் செய்து விட்டு அதிலிருந்து தப்பித்துக் கொள்ளும்படியாக விட்டு விடுவாரானால் அவர் நீதியுள்ளவர் அல்ல. அவர்களுக்கு நியாயத் தீர்ப்பு நிச்சயமாய் இருந்ததைப் போலவே நமக்கும் நியாயத் தீர்ப்பு நிச்சயம். 46. நாம் ஒரு காரியத்தைக் கவனிக்கிறோம். அதாவது இப்படிப்பட்ட காரியங்கள் நிகழும் போது அந்த நாட்களில் இருந்த முறை, அவைகளோடு போராடத்தக்கதாக ஒரு மனிதனை அந்த நாளில் தேவன் எழுப்பினார். அவர்களோ அதற்கு செவி சாய்க்காமல் போனார்கள். அவன் ஒரு பைத்தியக்காரன் என்று அவர்கள் நினைத்தார்கள். "அவன் தன் சுயபுத்தியை இழந்து விட்டான். அவன் ஒரு மத வைராக்கியம் உள்ளவன். வனாந்திரத்திலிருந்து வந்த மூடன், ஒரு விதமான காட்டு வெறியன்" என்று நினைத்தார்கள். இருந்த போதிலும் அவன் கர்த்தருடைய வார்த்தையை உடையவனாய் இருந்தான். ஆமென்... 47. "வார்த்தை அது சொல்வதைப் போலவே அர்த்தமாவதில்லை” என்று அவர்கள் இன்று கூறுகிறார்கள். "ஓ நல்லது வேதாகமம் ஒரு சரித்திர புத்தகம் தான்”, அதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் என்று யூகிக்கிறேன். அவர்கள் கூறுகிறார்கள். "ஏவாள் ஆப்பிள் பழத்தை சாப்பிடவில்லை. அவள் சாப்பிட்டது ஒரு-” என்ன அது? அது "வாதுமைப்பழம்” (Apricot) என்று அவர்கள் கூறுகிறார்கள் என நம்புகிறேன். "அது ஒரு வாதுமைப் பழமே" அதன் பிறகு அவர்கள், "மோசே மக்களை சிவந்த சமுத்திரத்தின்; (Red Sea) வழியாக அழைத்து வரவில்லை. அங்கே கொத்தாக நாணல் செடிகள் இருந்தன. அவர்கள் கடற்கரையோரம் கடல் போலிருந்த நாணல் (Sea of red) செடிகள் ஊடாக கடந்து சென்றார்கள்” என்று கூறுகிறார்கள். அப்படியானால் தண்ணீர், தண்ணீர் எப்படி மதில் சுவர் போல் இருபக்கமும் எழும்பி, அவர்கள் வெட்டாந்தரையில் கடந்து சென்றார்கள்? ஓ, என்ன அர்த்தமற்ற பேச்சு ஆனால் பாருங்கள். அதைப் போல ஒரு நாளிலே அந்த மக்கள் மீது தேவனுடைய கோபாக்கினை விழப் போகிறது. அதை செய்யப் போகிறது. 48. இதைப் போல ஒரு காரியமும் இல்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்... சபை மக்கள் கூட அற்புதங்களை நம்புகிறதில்லை . அவர்கள் சொல்லுகிறார்கள். "உனக்கு ஆயிரம் டாலர் (சுமார் ஒன்பதாயிரம் ரூபாய்) தருகிறேன். எனக்கு ஒரு அற்புதத்தைக் காட்டு. எனக்கு ஒரு அற்புதத்தைக் காட்டு”, நல்லது. அவர்கள் முன்பாக பத்தாயிரம் காரியங்கள் நடத்தப்பட்டாலும் அவர்களால் அதைக் காண முடியாது. ஏன் அவர்கள் அதைக் காணப் போவதில்லை. நீங்கள் சொல்லுகிறீர்கள். "அது கூடாத காரியம்" என்று ஓ இல்லை . அது அப்படி இல்லை . 49. எலியா ஒரு முறை தோத்தானில் இருந்தான். (சகோ. பிரான்ஹாம் எலிசாவைக் குறிப்பிடுகிறார். 2இராஜாக்கள் 6-ம் அதிகாரம் - தமிழாக்கியோன்) அவனைப் பிடித்துக் கொள்ள சீரியர் இராணுவம் அந்தப் பட்டணத்தைச் சுற்றி வளைத்துக் கொண்டது. ஏனெனில் அந்த நாட்டின் பலம் தீர்க்கதரிசியினிடத்தில் இருந்தது என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். ஏனென்றால் ராஜா...... அவர்களில் ஒருவன் சீரிய ராஜாவினிடத்தில், "ஏன் தெரியுமா? எலியா என்னும் தீர்க்கதரிசி, திஸ்பியன், நீர் உம்முடைய ரகசிய அறையில் பேசுவதை இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் சொல்லி விடுகிறான்” என்றான். 50. "அவனைப் பிடித்து வாருங்கள். நமக்கு தடங்கலாய் இருப்பவன் அவன் தான்" என்றான். சீரியரின் முழு இராணுவமே தோத்தானை சூழ்ந்து கொண்டது. அவர்கள் அதை வளைத்துக் கொண்டார்கள். 51. அப்போது கேயாசி, தீர்க்கதரிசியின் வேலைக்காரன், உறக்கத்திலிருந்து விழித்துப் பார்த்து, "ஓ, என் தகப்பனே, ராணுவம் இங்கே நம்மை சூழ்ந்துக் கொண்டது. நாம் முற்றிலுமாக வளைக்கப்பட்டு விட்டோம்” என்றான். 52. அதற்கு எலியா சொன்னான், "ஏன் அவர்களோடு அங்கே இருப்பவர்களைக் காட்டிலும் நம்முடன் இருப்பவர்களே அதிகம்” என்று பாருங்கள்? கேயாசி சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, "நான் ஒருவரையும் காணவில்லையே” என்றான். 53. அதற்கு எலியா, "தேவனாகிய கர்த்தாவே, இவன் கண்களைத் திறந்தருளும்” என்றான். அவன் கண்கள் திறக்கப்பட்டன. அந்த மலை தேவதூதர்களாலும் ரதங்களாலும் நிறைந்திருந்தது. கண்ணுக்குத் தெரியாத படை. 54. எலியா அங்கு சென்றான். வேதம் சொல்கிறது: "அவர் (தேவன்) அவர்கள் கண்களைக் குருடாக்கினார்” என்று அவன் அவர்களிடத்திற்கு நடந்து சென்றான். அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருந்தன. அவர்களிடம் சென்று, "எலியாவைத் தேடுகிறீர்களா?” என்றான். அவர்கள் கூறினார்கள், "ஆமாம், அவனைத்தான் தேடுகிறோம்” என்று. 55. எலியா, "வாருங்கள், அவன் எங்கேயிருக்கிறான் என்பதை சரியாக உங்களுக்கு சொல்கிறேன்" என்று கூறியபடி அவர்களை பதுங்கி இருந்த இடத்திற்கே நடத்திச் சென்றான். இராணுவம் இருந்த இடத்திற்கு நேராக.... நேராக சென்று அவர்களைப் பிடித்தான். 56. வேதாகமம் கூறுகிறது. "அவன் அவர்களைக் குருடாக்கினான்” என்று. அது முடித்து விடுகிறதாய் இருக்கிறது. இந்நாளில் மக்கள் ஆவிக்குரிய விஷயத்தில் மிகவும் குருடராய் இருப்பதினால், தேவனாகிய கர்த்தர் மக்கள் மத்தியில் இறங்கி வந்து அவர் வாக்குத்தத்தம் பண்ணின காரியங்களைச் செய்த போதிலும், அவர்களால் அதைக் காண முடியவில்லை . அவர்கள் ஆவியின் படி குருடராய் இருக்கிறார்கள். தேவனை அறியவில்லை . அவருடைய மகத்தான வல்லமையை அறியவில்லை. அதையே அவர்கள் எலியாவின் நாட்களில் செய்தார்கள் என்பதையும் இன்றைக்கும் அதையே அவர்கள் செய்கிறார்கள் என்பதையும் நாம் கவனிக்கிறோம். தேவன் அவர்களுடைய கண்களை குருடாக்கினார். அவர்கள், "அற்புதங்கள் என்று ஒன்றுமில்லை. அது போல ஒரு காரியமும் இல்லை. இவைகள் எல்லாம் உணர்ச்சி வசப்படும் காரியம் இது” என்று இந்நாட்களில் கூறுகிறார்கள். 57. எலியாவைக் குறித்தும் அவர்கள் அதே காரியத்தை சொன்னார்கள். ஏனென்றால் அவன் எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு, எலிசா அவனுடைய (எலியா) ஸ்தானத்தை எடுத்துக் கொண்ட போது இளம் வாலிபனான எலிசா, வழுக்கைத் தலையனாகிய அவன் சென்ற போது, பிள்ளைகள் அவன் பின்னாக ஓடி, "வயதான மொட்டைத் தலையா, எலியாவோடு நீ ஏன் மேலே போகவில்லை” என்றார்கள். பாருங்கள். அநேக காரியங்கள் செய்யப்பட்ட போதிலும் ஆரம்பத்தில் அதை அவர்கள் நம்பவே இல்லை. இந்த மகத்தான தேவனுடைய மனுஷன் மறுரூபமாகி அக்கினி இரதத்தில் பரலோகத்திற்கு சென்றார். ஆனாலும் மக்கள் இன்னும் அதை நம்பவில்லை. அவர்களுடைய பிள்ளைகளோ இந்த மனிதன் பின்னாக ஓடி, "வயதான மொட்டைத் தலையா, நீ ஏன் மேலே போகவில்லை" என்று கூறுகிறார்கள். பாருங்கள். பிறகு அந்தத் தீர்க்கதரிசி பிள்ளைகளை சபிக்கவும். ஒரு பெண் கரடி நாற்பத்திரண்டு பேரைக் கொன்று போட்டது. 58. இப்போது கவனியுங்கள். அந்த நாளில் நடந்தது போல இன்றும் வார்த்தைக்கு தங்கள் சொந்த விளக்கத்தைத் தருகிறார்கள். அப்படி அவர்கள் செய்ய விரும்பினால் அது அவர்கள் இஷ்டம். ஆனால் நாம் அதை நம்ப வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். வேதம் சொல்கிறது. "தேவனுடைய வார்த்தைக்கு தனிப்பட்ட விளக்கம் தேவையில்லை” என்று, தேவனே நம்முடைய சொந்த விளக்கத்தைத் தருகிறார். தேவன் அவருடைய வார்த்தையை உறுதிப்படுத்தும் போது அதுவே அதற்கு விளக்கமாக இருக்கிறது. நான் பலமுறை கூறியது போல, ஆதியிலே அவர், "வெளிச்சம் உண்டாகக் கடவது” என்றார். வெளிச்சம் உண்டாயிற்று. அது விளக்கப்பட வேண்டிய அவசியமில்லை. அது கடந்து விட்டது. அவர், "ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்” என்றார். அவள் அப்படியே ஆனாள். அவர் அவருடைய ஆவியை ஊற்றுவதாகக் கூறினார். அப்படியே செய்தார். கடைசி நாட்களில் அவர் என்னென்ன காரியங்கள் செய்வதாகக் கூறினாரோ அதையே செய்து கொண்டிருக்கிறார். அதற்கு விளக்கமே அவசியமில்லை. தேவனே அவருடைய சொந்த விளக்கத்தைத் தருகிறார். மூடன் என்ன கூறினாலும் சரி, அது தேவனை இம்மியளவு கூட தடுக்காது. 59. இயேசு பூமியில் இருந்த போது, இந்த நாளில் நாம் என்ன பெற்றிருக்கிறோமோ, அந்தக் காரியத்தைக் குறித்து தர்க்கம் செய்யும் அளவிற்கு அவர்களுக்கு அவநம்பிக்கை இருந்தது. ஒரு வேளை அதற்கும் அதிகமாக இருந்திருக்கக் கூடும். ஆனால் அது அவரைத் தடுக்கவில்லை. அவருடைய கடமையை அவர் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டே சென்றார். தேவனும் அவர் செய்த ஒவ்வொன்றையும் உறுதிப்படுத்திக் கொண்டே சென்றார். அவர் கூறினார். "நான் தனியாய் இருக்கவில்லை . என் பிதாவும் நானும் ஒன்றாக இருக்கிறோம். அவர் என்னில் வாசமாயிருக்கிறார். இந்தக் கிரியைகளை நான் சுயமாய் செய்யவில்லை. என்னில் வாசமாய் இருக்கும் பிதாவே அதை செய்கிறார். நான் அவருடைய கிரியைகளை செய்யாவிட்டால் என்னை விசுவாசிக்காதீர்கள். ஆனால் நான் கிரியைகளைச் செய்தும் நீங்கள் என்னை விசுவாசிக்கவில்லை என்றால் கிரியைகளையாவது விசுவாசியுங்கள்" வேறு விதமாகச் சொல்வதானால் அவர்கள், "வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள் என்று கூறினார். "வேத வாக்கியங்களை அறிவதன் மூலம் நீங்கள் நித்திய ஜீவனைப் பெற்றிருப்பதாக எண்ணுகிறீர்களே, என்னைக் குறித்து சாட்சி கொடுப்பவைகளும் வேதவாக்கியங்களே" ஆமென் எப்படிப்பட்ட ஒரு வாக்குமூலம் இயேசு கூறினார். "நான் யாரென்று உங்களுக்குக் கூறுவது அந்த வேதவாக்கியங்களே.” 60. எந்த மணிவேளையில் நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதையும், நீங்கள் காணத்தக்கதாக நடந்த காரியங்கள் என்னவென்பதையும் வேத வாக்கியங்களே உங்களுக்கு கூறுகின்றன. அது தேவன் தம்முடைய ஜனங்களின் மத்தியில் இருக்கிறார் என்று கூறுகின்றது. தேவன் ஒருவரேயன்றி வேறு எதுவும் மரித்தவனை உயிரோடு எழுப்ப முடியாது. இப்போது அவர் செய்து கொண்டிருக்கும் காரியங்களை அவரேயன்றி வேறெதுவும் செய்ய முடியாது. ஏனெனில் வேதம் சொல்கிறது. "அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்” என்று . 61. இப்பொழுது ஜனங்களுடைய தற்காலப் போக்கைப் பார்க்கிறோம். "ஓ, காலம் கடந்து போய் விட்டது. அற்புத அடையாளங்கள் என்று ஒன்றுமில்லை. மக்கள் உணர்ச்சி வசப்பட்டு இருக்கிறார்கள்.” 62. இவர்களுக்கும், இவர்களுடைய வேத சாஸ்திரிகளுக்கும் எதிராகக் குரல் எழுப்பும் தீர்க்கதரிசியாகிய அந்த எலியாவுக்கு செவி கொடுங்கள். கவனியுங்கள். கவனியுங்கள். அவன் பேசின போது தானே தேவனைப் போல் பேசினான். எலியாதானே தேவன் போல பேசினான். "நான் சொன்னாலொழிய வானத்தில் இருந்து பனி கூட கீழே விழாது” ஆமென். ஆம், ஐயா, தேவனுடைய சமூகத்திலே தீர்க்கதரிசி வெகு காலமாக காத்திருந்தான்..... 63. பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகள் அல்லது வேறு எந்தக் காலத்துத் தீர்க்கதரிசிகளும் (தேவனுடைய) வார்த்தையாக மாறும் அளவிற்கு தேவனுடைய சமூகத்தில் ஜீவித்தபோது, அவர்களுடைய செய்தியானது வார்த்தையாகவே இருக்கிறது. அவன், "கர்த்தர் உரைக்கிறதாவது” என்று சொன்னதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அந்த மனிதர்கள் தேவனிடத்தில் இருந்து செய்திகளைப் பெற்றுக் கொண்டபோது, அவர்களுடைய சுய சிந்தனையானது.... அளவிற்கு மறைக்கப்பட்டார்கள். அது அவர்களுடைய நினைப்பிற்கு மாறாக இருக்கலாம். அது சரிதான் என்பதை அவர்களால் உணர முடியாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் "கர்த்தர் உரைக்கிறதாவது” என்று சொல்லி தேவனுடைய வார்த்தையை அறிவித்துக் கொண்டிருந்தார்கள். 64. " நான் சொன்னாலொழிய மழை பெய்யாது!" ஓ ஒரு வாக்குமூலம் அவன் தேவனுடைய சமூகத்தில் காத்திருந்தான். பூரணமாக உறுதிப்படுத்தப்பட்டான். அது (ஆமோஸ் 3:7-ம்) வசனத்துடன் இணைந்து செல்வதை நினைவு கூருங்கள். "கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்" அவன் கூறினான், "மழையே பெய்யாது” என்று அவன் முதலாவது 65. அவர்கள் அவனைப் பார்த்து நகைத்தனர். அவன் வெறிபிடித்தவன் என்று நினைத்தனர். "அந்த மத வெறியன்” ஆனால் பாருங்கள். மழை பெய்யாமல் போகும். கர்த்தர் உரைக்கிறதாவது என்ற செய்தியை உடையவனாய் அவன் இருந்தான். அதற்கு முன்பாக தேவன் தம்முடைய ஊழியக்காரனான எலியாவுக்கு அதை வெளிப்படுத்தினார். அவன் உறுதிப்படுத்தப்பட்ட, நிரூபிக்கப்பட்ட தீர்க்கதரிசியாக இருந்தான். ஆகவே மக்கள் மனந்திரும்பியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அவர்கள் அவனை நோக்கி நகைத்தார்கள். "ஓ ஏராளமான மழையைப் பெற்றோம் நீர்த் தேக்கங்கள் எல்லாம் நிறைந்திருக்கின்றன. ஆறுகளிலும் தண்ணீர் நன்றாக ஓடுகிறது” என்றார்கள். 66. வேதம் சொல்லுகிறது. “மூன்று வருஷமும் ஆறு மாதமும் அங்கே பனி கூட பெய்யவில்லை ”. எல்லா இடத்திலும், எல்லா ஓடைகளும் நீர் நிலைகளும் காய்ந்து விட்டன் அந்த மனிதனல்ல, தேவன் அந்த மனிதன் மூலம் பேசினார். அது அப்படித் தான் இருந்தது. நாம் அதை எப்போதும் அறிவோம். ஆகவே அவன்..... 67. உண்மையான கர்த்தர் உரைக்கிறதாவது என்ற செய்தியுடன், தேவனால் முன்குறிக்கப்பட்டு, தேவனிடத்திலிருந்து அனுப்பப்பட்ட ஒரு மனிதன் வரும்போது செய்தியும் அதைக் கொண்டு வந்த தூதனும் ஒன்றாக இருக்கிறார்கள் என்று பார்க்கிறோம். ஏனென்றால் அவன் கர்த்தர் உரைக்கிறதாவது என்ற செய்திக்கு, வார்த்தைக்கு வார்த்தை, அடையாளமாக இருக்கத்தக்கதாக அனுப்பப்பட்டான். ஆகவே அவனும் அவனுடைய செய்தியும் ஒன்றாக இருக்கிறார்கள். 68. ஸ்தாபன சடங்காச்சாரங்களுடன் இணைந்திருக்கும் ஒரு ஸ்தாபன மனிதன், அவனும் அந்த சபையும் ஒன்றாக இருக்கிறார்கள். ஏதாவது ஸ்தாபன மனிதன், அவனும் அந்த சபையும் ஒன்றாக இருக்கிறார்கள். வேதியல் சபை ஒரு வேத சாஸ்திரி. அது சரியாக இருக்கிறது. 69. பிறகு ஒரு மனிதன் கர்த்தர் உரைக்கிறதாவது என்ற வார்த்தையோடு வரும் போது, அவனும் அந்த செய்தியும் ஒன்றாக இருக்கிறார்கள். எலியா கர்த்தர் உரைக்கிறதாவது என்ற வார்த்தையோடு வந்த போது அவனும் அவன் செய்தியும் ஒன்றாக இருக்கிறார்கள். அதைப்போலவே இயேசுவும் வந்த போது அவர் வார்த்தையாக இருந்தார். யோவான் 1. ஆகவே தேவனுடைய வார்த்தையும் அந்தக் காலத்து செய்தியாளரும் எல்லாக் காலத்திலும் ஒன்றாகவே இருக்கிறார்கள். அதுதான் சரி. 70. தீர்க்கதரிசனமாக முன்னுரைக்கப்பட்ட வார்த்தையே இயேசு, "ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி இந்தக் குழந்தையைப் பெறுவாள்” என்று தீர்க்கதரிசிகளால் முன்னறிவிக்கப்பட்டவர் இவரே. பின்னோக்கிப் பார்த்தோமானால், ஆதியில் தேவன் அவர்களிடம், "ஸ்தீரீயின் வித்து சர்ப்பத்தின் தலையை நசுக்கும். அவன் அவருடைய குதிங்காலை நசுக்குவான்” என்றார். இந்த எல்லா தீர்க்கதரிசனங்களும் கொடுக்கப்பட்டிருந்தன. தாவீது கதறினான். மற்ற எல்லா தீர்க்கதரிசிகளும் காலங்கள் தோறும் அவரைக் குறித்துப் பேசினார்கள். வெளிப்படுத்தப்பட்ட அந்த வார்த்தை அவரே. அல்லேலூயா. 71. நான் என்ன சொல்ல முயற்சிக்கிறேன் என்று காண்கிறீர்களா? இந்தக் காலையிலே உங்களுடன் மிகவும் தெளிவாகப் பேசினேன். மணவாட்டி எனும் ஜீவனுள்ள சபையில் ஜீவனுள்ள தேவனுடைய அதிகாரத்தை நீங்கள் காணவில்லையோ? நோயாளிகள் சுகமடைகிறார்கள். மரித்தவர்கள் உயிரோடு எழுப்பப்படுகிறார்கள். கால் ஊனமுற்றோர் நடக்கிறார்கள். குருடர்கள் பார்வையடைகிறார்கள். சுவிசேஷம் அதன் வல்லமையோடு அறிவிக்கப்படுகிறது. ஏனென்றால் செய்தியும் செய்தியாளரும் ஒன்றாக இருக்கிறார்கள். வார்த்தையானவர் சபைக்குள்ளும் தனி நபருக்குள்ளும் இருக்கிறார். 72. கர்த்தர் உரைக்கிறதாவது என்ற செய்தியோடு சென்று, "மழை பெய்யாது” என்று சொன்ன போது தேவனுடைய வார்த்தையானது எலியாவுக்குள் இருந்தது. அது எலியா அல்ல, எலியாவுக்குள் இருந்த தேவன். 73. கிறிஸ்தவ அறிவியல் (Christian Science) குழுவைச் சேர்ந்த ஒரு பெண்மணி - இதைக் குறித்து பலமுறை சொல்லியிருக்கிறேன். என்னிடம் சொன்னார்கள். "திரு பிரான்ஹாம் அவர்களே, நீங்கள் அளவிற்கு மிஞ்சி இயேசுவை மிகவும் உயர்த்துகிறீர்கள்". நான் கூறினேன், "அது ஒன்றிற்காக மட்டுமே நான் உத்தரவாதமுள்ளவனாய் இருக்கிறேன் என்று நம்புகிறேன்.” அதற்கு அவர்கள், நீங்கள் அவரை தெய்வீகம் வாய்ந்தவராக்க முயற்சிக்கிறீர்கள்” என்றார்கள். நான் கூறினேன். "அவர் தெய்வீகம் வாய்ந்தவர்தான்”. 74. அவர்கள் கூறினார்கள், "ஓ, அவர் ஒரு தீர்க்கதரிசிதான். அவர் நல்ல மனிதர்தான். ஆனால் அவர் தெய்வீகம் வாய்ந்தவரல்ல." 75. நான் கூறினேன்,"நல்லது. அவர் தெய்வீகம் வாய்ந்தவர் அல்ல என்று சொல்லும் ஒரு வசனத்தை எனக்கு காண்பியுங்கள்” என்று. 76. அதற்கு அவர்கள் கூறினார்கள். "அவர் லாசருடைய கல்லறைக்குச் சென்றபோது, அவர் கண்ணீர் விட்டார் என்று யோவான் சுவிசேஷம் கூறுகிறது.” 77. "நல்லது. உண்மைதான். அவர் கண்ணீர் விட்டார். அவர் மனிதனாகவும் தெய்வீகம் வாய்ந்தவராகவும் இரண்டும் சேர்ந்திருந்தார். அவர் மனிதனாக இருந்ததினால் அழுதார். ஆனால் மரித்தவனை உயிரோடு எழுப்புவதற்கு அவர் தேவனாகத் தான் இருக்க வேண்டும்” என்று நான் கூறினேன். அதுதான் சரி. மேலும் கூறினேன், "அவர் மனிதனாக இருந்தார். ஆகவே பசியாயிருந்தார். ஆனால் அவர் தேவனாக இருந்தார். ஆகவே ஐந்து அப்பமும், இரண்டு மீனையும் வைத்து ஐயாயிரம் பேரை போஷித்தார். அது தான் சரி. "அவர் மனிதனாக இருந்தார். ஆகவே படகின் பின்னணையத்தில் தூங்கினார். ஆனால் தண்ணீரை அமைதலாக்கக் கூடிய தேவன் அவருக்குள் இருந்தார்.” எதற்காக? அவரும் அவருடைய செய்தியும் ஒன்றாக இருந்ததினால். ஆமென்..... 78. "நானும் என் பிதாவும் ஒன்றாய் இருக்கிறோம். என் பிதா எனக்குள்ளே வாசமாக இருக்கிறார்” என்று அவர் கூறினார். சரீரப் பிரகாரமாக தேவத்துவத்தின் பூரண நிறைவாக அவர் இருந்தார். 79. அன்றொரு நாள் நான் "ஏழு சபையின் காலங்கள்” என்ற செய்தியைக் கொண்டு வந்த போது இந்தக் காரியம் எனக்கு மிகவும் ஆச்சரியமானதாக இருந்தது என நினைக்கிறேன். தொடக்கமாக சொல்ல வேண்டுமானால், "அவருடைய மயிர் பஞ்சைப் போல வெண்மையாய் இருந்தது” என்று சொல்லப்பட்ட விதமாக இயேசு தலையில் அந்த வெண்மையோடு நின்று கொண்டிருப்பதை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. முப்பத்தி மூன்று வயதான ஒரு மனிதன் (தலை) எவ்விதம் உறைந்த பனியைப் போல வெண்மையாக இருக்க முடியும் என்று என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. 80. ஒரு நல்ல வேத அறிஞரை, பெந்தேகோஸ்தே அறிஞரை, நல்ல அன்பான நண்பரை அழைத்தேன். அவர் தான் சகோ.ஜாக் மூர். அவர் சுறுசுறுப்பான, அறிவாற்றல் நிறைந்த மனிதன். அவர் கூறினார். "சகோ. பிரான்ஹாமே, அது மகிமைப்படுத்தப்பட்ட இயேசு, அவர் மகிமையடைந்த பின்பு அவ்விதமாகக் காட்சியளிக்கிறார். இல்லை. என்னால் அதை நம்பமுடியவில்லை. இல்லை. நான், "நல்லது சகோ. மூர் அவர்களே, உங்களுக்கு நன்றி என்றேன். 81. நான் அறைக்குள்ளே சென்று தேவனோடு பேசத் தொடங்கினேன். நான் என்னுடைய வேத அகராதியை (Concordance) புரட்டி தானியேல் தீர்க்க தரிசியின் புத்தகத்தில் அவரைக் குறித்து சொல்லப்பட்டிருப்பதைப் பார்த்தேன். அங்கே சொல்லப்பட்டிருந்தது. "அவர் நீண்ட ஆயுசுள்ளவன் இடம் வந்தார். அவர் (நீண்ட ஆயுசுள்ளவர்) தலைமயிர் பஞ்சைப் போல வெண்மையாக இருந்தது” நான் கூறினேன். "கர்த்தாவே, நான் என்ன சொல்வதென்றே தெரியவில்லையே, எனக்கு பொறுப்பு இருக்கிறதே” என்றேன். நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். ஏழு முத்திரைகள் திறக்கப்பட்டதற்கு முன்பாக, சுமார் ஒரு வருஷம் அல்லது அதற்கும் முன்பாக "கர்த்தாவே இது என்ன?” என்று ஜெபித்துக் கொண்டிருந்தேன். 82. நான் பார்த்தபோது எனக்கு முன்பாக ஒரு மனிதன் நின்று கொண்டிருந்தான். அவன் ஒரு நீதிபதி. வெண்மையான டோப்பா (wig) தலையில் அணிந்திருந்தான். முன்காலத்தில் நீதிபதிகள் வெண்மையான டோப்பா அணிவது வழக்கம். அவர் தான் பிரதானமான அதிகாரம் பெற்றவர் என்பதை எடுத்துக் காட்ட. 83. வெண்மையான டோப்பாவோடு இயேசுவைப் பார்த்த போது நான் கூறினேன். நாம் அறிந்தவண்ணம் அவர்தான் பிரதான அதிகாரம் பெற்றவர் என்ற சத்தியத்தையே அது உறுதிபடுத்துகிறதாய் இருக்கிறது. அதையே தேவனும் மறுரூபமலையில் சாட்சியாகக் காண்பித்துக் கூறினார். "இவர் என் நேச குமாரன், பிரதான அதிகாரம் பெற்றவர், இவருக்கு செவி கொடுங்கள்.” 84. ஏழு முத்திரைகளின் தொடக்கத்தில் கூர்நுனிக் கோபுர வடிவத்தில் ஏழு தூதர்கள் கீழே வந்தபோது அங்கே நின்று என்னிடத்தில், நான் திரும்பி இங்கே வந்து ஏழு முத்திரைகளின் பேரில் பேச வேண்டும் என்று கூறினார். அவர் என்னோடு இருப்பார். இழக்கப்பட்ட காரியங்கள் என்ன என்பதை அவர் காண்பித்தார். புஸ்தகத்தின் புறம்பாக முத்தரிக்கப்பட்டிருந்தது என்றும், அவை (முத்தரிக்கப்பட்டிருந்த இரகசியங்கள்) வேதத்திலே எழுதப்பட்டிருக்காத காரியங்களாக இருக்கும் என்றும் நான் எப்போதும் நினைப்பேன். ஆனால் அவர் அவ்விதமாக செய்ய மாட்டார் என்று விளங்க வைக்கப்பட்டது. அவை வேதத்திலே எழுதப்பட்டிருக்கும் காரியங்கள் அல்ல.... அவை வேதத்திலே மறைத்து வைக்கப்பட்டிருக்கும் காரியங்களாக இருக்கின்றன. "ஆகவே ஒருவன் இத்துடன் ஒரு வார்த்தையை கூட்டினாலும் அல்லது எதையாகிலும் எடுத்துப் போட்டாலும்....." ஆகவே இந்த ஏழு சபையின் காலங்களாக வேதத்திலேயே இருக்கும் இரகசியமாக அவை இருக்கின்றன. தண்ணீர் ஞானஸ்நானத்தைக் குறித்தும் மற்றும் அவர்கள் இத்தனைக் காலமாகத் தடுமாறிக் கொண்டிருக்கும் மற்ற காரியங்களைக் குறித்தும் அவை ஒவ்வொன்றும் ஒரு இரகசியம் என வெளிப்படுத்தின. 85. அது மேலே சென்றபோது கலிபோர்னியா, மெக்ஸிகோ, டூசான் மற்றும் பல இடங்களிலும் பெரிய ஆய்வுக்கூடங்களில் இருந்து (observatories) அதைப் புகைப்படம் எடுத்தனர். அது விசித்திரமான காட்சியாக இருந்தது. இதோ இங்கே அமர்ந்திருக்கும் சகோ. பிரட் சோத்மன்னும், நானும், ஜீன் நார்மனும் அது மேலே சென்ற போது அங்கே நின்று கொண்டிருந்தோம். அவர்கள் அதைப் புகைப்படம் எடுத்தும் இன்னமும் அது என்ன என்பதை அறியாதிருக்கிறார்கள். சில காலம் முன்பு, எல்லாரும், "இங்கே இதைப் பாருங்கள். இவ்விதமாகக் காணப்படுகிறது. அந்த தூதர்களின் இறக்கைகளையும் அவை எப்படி மூடப்பட்டிருக்கின்றன என்பதையும் பாருங்கள்” என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். 86. ஒரு நாள் அதை வலப்பக்கமாகத் திருப்பிப் பார்த்த போது இயேசு கிறிஸ்துவைக் கண்டேன். ஹாப்மன் வரைந்த படத்தைப் போல மிகவும் தத்ரூபமாக இருந்தது. தலையில் வெண்மையான டோப்பா அணிந்தவராய், அவரே சர்வத்துக்கும் மேலான அதிகாரம் பெற்றவர் என்பதைக் காண்பித்தவராய், பூமியைக் கீழ்நோக்கிப் பார்த்தவராக நின்று கொண்டிருந்தார். அதை வானங்கள் அறிவிக்கின்றன. வேதாகமம் அறிவிக்கின்றது. செய்தியும் அறிவிக்கின்றது. இவை எல்லாம் ஒன்றாயிருக்கின்றன. வெள்ளை டோப்பா அணிந்தவராய் சர்வத்துக்கும் மேலான அதிகாரம் பெற்றவர். பாருங்கள், அவருடைய கருந்தாடியை உங்களில் அநேகர் அந்தப் படத்தைப் பார்த்திருக்கிறீர்கள். அதை நாமும் இங்கே வைத்திருக்கிறோம். வலப்புறமாக சாய்ந்து பக்கவாட்டில் அதைப் பாருங்கள். அவரையே புகைப்படம் எடுத்ததுப் போல தத்ரூபமாக இருக்கிறார். அவர்கள் அதைத் தவறான கோணத்திலிருந்து பார்க்கிறார்கள். நீங்கள் அதை சரியான கோணத்தில் வைத்துப் பார்க்க வேண்டும். தேவனாகிய கர்த்தர் தாமே எது சரியான கோணம் என்பதை வெளிப்படுத்த முடியும். உங்களுக்கு வலதுபக்கமாகத் திருப்பி அதைப் பாருங்கள். அதோ இருக்கிறார் தத்ரூபமாக, அது அங்கே புகைப்படமாக எடுக்கப்பட்டது. 87. நான் அவரை முதன் முதலாகப் பார்த்தபோது அவர் ஹாப்மன் வரைந்த தலையைப் போலக் காணப்பட்டார். இதற்கு முன்பு நான் அதைப் பார்த்தது கிடையாது. சில வருடங்களுக்குப் பின்பு பில்லி சண்டே (Billy Sunday) கூடாரத்தில் அதைப் பார்த்தேன். அன்று முதற்கொண்டு என் வீட்டில் அந்தப் படங்களில் ஒன்றாகிலும் இல்லாமல் இருந்ததில்லை . 88. இங்கே ஆகாயத்திலே, இந்த தரிசனத்திலே நான் கண்ட அதே தேவன், இந்தப் பள்ளிக் கட்டிடம் நிற்கும் ஸ்தலத்திலே நான் சிறுபையனாக இருந்த போது அவ்விதமாகவே அவர் காணப்பட்டார். இப்போது வானத்திலே முப்பத்தி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இதுவே சத்தியம் என்று அறிவிக்கிறார். அவ்விதமாகத்தான் அவர் காணப்படுகிறார். யாரோ ஒருவருடைய யோசனையாக புரிந்துக் கொள்ள முடியாதபடி இருக்கும் ஒரு காரியம் அல்ல அது. 89. வாடிகன் நகரில் இருப்பது போல், அவர்கள் கிறிஸ்துவைப் படம் வரைந்து வைத்திருக்கிறார்கள், தாடி வரை அவருடைய மோவாய் கட்டையைச் சுற்றிலும், சுமார் ஒரு அங்குல அளவிற்கு ஒரு வெள்ளை வளையத்துடன், அவருடைய வாய் வரையிலும் சுற்றி இவ்விதமாய் இருக்கிறது. அதை கிறிஸ்து என்று அழைக்கிறார்கள். 90. ஒருமுறை ஒரு பழைய கதீட்ரலில் (கிறிஸ்தவர்களின் பிரதான கோயில்) நான் பார்த்த ஒரு கிரேக்கப் படத்தையே அது என் நினைவிற்கு கொண்டு வந்தது. அதில் ஆதாம் ஏவாள் “மிருகங்களாகவோ அல்லது ஏதோ ஒன்றாக இருந்தார்கள்” என்று சித்தரிக்கப்பட்டிருந்தது. ஆவிக்குரிய சில காரியங்களை மாம்ச சிந்தையானது இவ்விதமாகத்தான் புரிந்து கொள்கிறது. ஜீவித்தவர்களிலேயே ஆதாம் தான் மிகவும் அழகானவன் என்றும் ஏவாள் எல்லா விதத்திலேயும் பூரணமானவளாக இருந்தாள் என்றும் நான் நினைக்கிறேன். 91. மாம்ச சிந்தையானது தெய்வீக காரியத்தை, அவர்கள் சுயயோசனைக்குள் மூடி மறைத்து விடுகிறது. பிறகு தேவன் அவருடைய வல்லமையை அனுப்பி அதைக் கொண்டு அந்தக்காரியத்தைப் பிரித்து விடுகிறார். சரியாக அதே காரியம் தான் ஆகாபின் நாட்களில் இங்கு நடந்தது. 92. எலியா அதைச் சொல்லக் கூடும் என்று பார்க்கிறோம். ஏனென்றால் அந்த மணி நேரத்திற்கான செய்தியும் தேவனுடைய வார்த்தையும் அல்லது செய்தியாளரும், செய்தி, செய்தி வார்த்தை முற்றிலும் ஒரே காரியமாக இருக்கின்றன. தீர்க்கதரிசி, வார்த்தை , செய்தி, செய்தியாளர், செய்தி அந்த ஆள் எல்லாம் ஒன்றே. இயேசு கூறினார். "என்னைக் குறித்து எழுதப்பட்டிருக்கும் கிரியைகளை நான் செய்யாவிட்டால் என்னை விசுவாசிக்க வேண்டாம். அது நல்லது எந்த மனிதனும் அவனுடைய செய்தியும் ஒன்றே. ஆமென்.... 93. ஆகவே தான் தேவனுடைய கிரியைகள் செய்வதை அவர்கள் இந்நாளில் விசுவாசிப்பதில்லை. ஏனென்றால் அவர்கள் தேவனுடைய செய்தியை ஏற்றுக் கொள்வதில்லை. அவர்கள் செய்தியை விசுவாசிப்பதில்லை . 94. ஆனால் தேவனுடைய நேரத்தில் நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை விசுவாசிக்கிறவர்களுக்கு இந்தக் காரியங்கள் மறைவான ஆகாரமாக இருக்கின்றன. அவர்கள் (மற்றவர்கள்) அதையே நோக்கிப் பார்த்தாலும் அதைக் காண கூடாதபடி தேவன் அவ்வளவாக அதை மறைத்து வைத்தார் என்பதை நினையுங்கள். அவ்விதமாக எலியா சீரியரின் ராணுவத்தைக் குருடாக்கினான். அதேவிதமாகவே தேவனும் விசுவாசி என்னும் பிள்ளைக்குரிய உண்மையான அசல் ஆகாரத்தைக் காணாதபடிக்கு அவிசுவாசியைக் குருடாக்குகிறார். 95. "ஒரு மத வெறியன்” என்று அவர்களால் அழைக்கப்பட்ட நோவா ஒரு பேழையைக் கட்டிக் கொண்டிருந்தான். அவனுடைய கண்கள் தேவனுடைய வார்த்தைக்கும் வாக்குத்தத்தத்திற்கும் திறந்திருந்தன. மதவெறி என்று அவர்களால் அழைக்கப்பட்ட அந்தக் காரியமே நோவாவையும் அவன் குடும்பத்தையும் காத்துக் கொண்டது. பாருங்கள். அதே காரியம் தான். மக்கள் எந்தக் காரியத்தை நோக்கி நகைக்கிறார்களோ, அதே காரியத்திற்காகவே நாம் ஜெபிக்கிறோம். மக்கள் "பைத்தியம்” என்று அழைப்பதை நாம் "மகத்தானது” என்கிறோம். உலகம் "மகத்தானது” என்று அழைப்பதை தேவன் "முட்டாள்தனம்" என்கிறார். உலகம் "முட்டாள்தனம்” என்றழைப்பதை தேவன் "மகத்தானது” என்கிறார். அது சரியானதிற்கும் தவறானதிற்கும் இடையில் முற்றிலுமான வித்தியாசமாக இருக்கிறது. இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராய் இருக்கிறார். 96. நினைத்துப் பாருங்கள். தேவனுடைய வார்த்தையின் படியும், தேவனுடைய அழைப்பின்படியும் தேவனுடைய திட்டத்தின் படியும் அவன் தன்னுடைய ரகசியமான இடத்திற்குச் சென்றான். எலியா தேவனுடைய முன்னறிவிப்பின் படியேயும் திட்டம்) அவனுடைய வாழ்க்கையின் அழைப்பின் படியேயும் வார்த்தையின் படியேயும் தன்னுடைய ரகசிய இடத்திற்குச் சென்றான். நாம் நுழைந்திருப்பது அந்த வழியாக இல்லை என்றால் வேறு எவ்விதம் நாம் அங்கே போக முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. 97. கவனியுங்கள். பஞ்சம் தொடங்கும் முன்பே எலியா தன் ஜீவனத்திற்காக இந்த ரகசியமான இடத்திற்குச் சென்றான். நியாயத் தீர்ப்பு பூமியைத் தாக்கத் தொடங்கும் முன்பாக சபையானது ஏற்கனவே அழைக்கப்பட்டாகி விட்டது என்பதற்கு இது முன்னடையாளமாக (Type) வைக்கப்பட்டிருக்கிறது. மணவாட்டி ஏற்கெனவே முன் குறிக்கப்பட்டு நியாயத்தீர்ப்பு தாக்கும் முன்பாகக் காத்துக் கொண்டிருக்கிறாள். ஏற்கனவே காத்துக் கொண்டு, தேவனுடைய ஆகாரத்தைப் புசித்துக் கொண்டு தேவனுடைய ஆசீர்வாதங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள். சரியான சுயாதீனத்திலுள்ள எந்த மனுஷனும் நாம் சரியாக, நியாயத்தீர்ப்பின் நேரத்திற்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறோம் என்பதை அறிந்து கொள்வான். ஆமென்... 98. பாருங்கள்? சகோ. பாங்க்ஸ் மற்றும் இன்றிரவு இங்கு இருக்கும் உங்களில் அநேகர் (ஆண்கள்) அந்த மலையின் மீது அந்தக் காலையில் நின்று கொண்டிருந்தீர்கள். 99. கர்த்தருக்கு சித்தமானால் அடுத்த ஞாயிறு காலை அந்த மலையைக் குறித்துப் பேச விரும்புகிறேன். இன்றிரவு (உங்களிடம்) சொல்லாமல் விலகி இருக்க முடியாதபடி கூடுதலான மகத்தான வெளிப்படுத்தல் ஒன்றைப் பெற்றுக் கொண்டேன். பாருங்கள். நான் அதைப் பெற்றிருக்கிறேன். அது ஒன்றன்பின் ஒன்றாக இடைவிடாமல் நிகழ்ந்துக் கொண்டே வருகின்றது பாருங்கள்? அவ்விதமாக நிகழ்வது ஒரு போதும் நின்று போகாது. ஏனென்றால் அது கர்த்தர் உரைக்கிறதாவது என்று இருக்கிறது. 100. இங்கிருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் நான் நின்று கர்த்தர் உரைக்கிறதாவது, இது இன்னின்ன விதமாக இருக்கும் என்று சொல்வதை ஆயிரமாயிரம் முறைகளுக்கு மேலான ஒலிநாடாக்களில் கேட்டிருக்கிறீர்கள். மேலும் செய்தித் தாள்களும் பத்திரிகைகளும் கூட அது அவ்விதமாகவே இருப்பதாக அறிக்கையிட நேர்ந்திருக்கிறது. அது எதைப் பற்றியது என்பதை அவர்கள் அறியாதிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அதைப் பார்த்திருக்கிறார்கள். அது என்னவென்பதை அவர்கள் அறியவில்லை. ஆனால் வார்த்தையே சரியான சத்தியம் என்று அது உறுதிப்படுத்துவதைக் கண்டிருக்கிறார்கள். 101. முப்பத்தி மூன்று வருடங்களுக்கு முன்பு அல்லது 1933-ல் நாம் அந்த நதியில் நின்று கொண்டிருந்தபோது, கர்த்தருடைய தூதனானவர் அந்த நாளில் கீழே இறங்கி வந்து அவர் செய்த காரியங்களைப் பற்றி சொன்னார். நான் வெளியே வந்தபோது அந்தக் கரையில் நின்று கொண்டிருந்தவர்களில் அநேகர், பில்லி, இதனுடைய அர்த்தம் என்ன?” என்றார்கள். 102. நான் கூறினேன். "அது எனக்காக இல்லை, உங்களுக்காக, நான் விசுவாசிக்கிறேன். நீங்களோ விசுவாசிப்பதில்லை” பிறகு நடந்து சென்று விட்டேன். 103. பிறகு அந்த போதகர் என்னிடம், "நீ உன் ஏழாம் வகுப்புப் படிப்பை வைத்துக் கொண்டு உலகம் முழுவதும் சென்று பேரரசர்களுக்கும், சக்கரவர்த்திகளுக்கும் ராஜாக்களுக்கும் மற்றுமுள்ளோருக்கும் ஜெபிக்கப் போவதாக எண்ணமா? ஓ அதை மறந்து விடு” என்று கூறினார். 104. என்னால் அதை மறக்க முடியவில்லை . அது என் இதயத்தின் மீது பொறிக்கப்பட்டுள்ளது. அவர் எவ்விதமாக செய்வதாகக் கூறினாரோ அவ்விதமாகவே, அவர் சொன்ன ஒவ்வொரு காரியமும் இப்போது இங்கே முப்பத்தி மூன்று வருடங்களுக்குப் பிறகு பூரணமாக நடந்தேறியது. அவர் தேவனாயிருக்கிறார். ஒரு போதும் தவற மாட்டார். அவர் எப்போதும் தம்முடைய வார்த்தையைக் காக்கிறார். அவர் ஒரு போதும் அதை சந்தேகிக்காதீர்கள். 105. இப்போது கவனியுங்கள். அவன் தேவனுடைய திட்டத்தின் படியேயும் (முன்னறிதல்) தேவனுடைய அழைப்பின் படியேயும் தேவனுடைய வார்த்தையின் படியேயும் பஞ்சம் தொடங்கும் முன்பாக அங்கே சென்றான். இப்போது நியாத்தீர்ப்பு தாக்க ஆயத்தமாக இருக்கிறது என்று அறிகிறோம். 106. சகோதரன் பாங்க்ஸ் உட் இங்கே அமர்ந்திருக்கிறார். அன்றையத் தினம் அந்த மலையின் மீது ஏறிக்கொண்டிருந்தேன். அடுத்த பத்து அல்லது பதினைந்து நிமிடங்களில் நடைபெறவிருக்கும் ஜெபவரிசைக்காக உங்கள் விசுவாசம் கட்டப்படத்தக்கதாக மீண்டும் இதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். சகோதரன் பாங்க்ஸுக்கு முன்பாக நடந்துச் சென்று கொண்டிருந்தேன். அவர்... சகோதரி ரூபி சுகவீனமாக இருந்ததால் அவர்களைவிட்டுவிட்டு அவர் வந்திருந்தார் என நினைக்கிறேன். எனக்குப் பின்னாக வந்து கொண்டிருந்த அவருடைய முகத்தை கவனித்தேன். சிவந்து போயிருந்தது. பின்னாகத் திரும்பிப் பார்த்து, மலையானது ஒரு வேளை அவர் மேலே ஏறி நடப்பதற்கு சற்று கடினமாக இருக்கிறது போலும் என நினைத்துக் கொண்டு சற்று மெதுவாக நடந்தேன். அந்தப் பாலைவனத்தில் அந்த மலையின் மீது சில மாதங்களுக்கு முன்பாக கர்த்தருடைய தூதர்கள் தோன்றினர். அதே திசையை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தோம். 107. நான் மலையின் மீது ஏறினபோது தேவ ஆவியானவர்... நான் சுற்றும் முற்றும் மலையுச்சியைப் பார்த்தபோது அவர், “அந்தக் கல்லை எடுத்து அவரை நோக்கி (பாங்க்ஸ் உட்) "கர்த்தர் உரைக்கிறதாவது” இன்னும் சிலமணி நேரத்தில் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று கூறு” என்றார். 108. நான் அந்தக் கல்லை எடுத்துக் கொண்டு, "சகோ, பாங்க்ஸ், ஏன் என்று எனக்குத் தெரியாது” என்று கூறியபடி அதை வானத்தில் வீசி எறிந்து விட்டு, "கர்த்தர் உரைக்கிறதாவது, தேவனுடைய மகிமையைக் காணப் போகிறாய்” என்று கூறினேன். "அது ரூபியைப் பற்றியதா?” என்று கேட்டார். 109. "இல்லை. அது உன்னைப் பற்றியோ ரூபியைப் பற்றியோ எவரைப் பற்றியும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. கர்த்தர் உரைக்கிறதாவது ஏதோ ஒன்று நிகழப் போகிறது என்று அது சொன்னதாக மாத்திரம் நான் நினைக்கிறேன்” என்று கூறினேன். 110. மறுநாள் காலையில் நாங்கள் அங்கு அமர்ந்திருந்தோம். ஆண்களில் அநேகர்: அவர்களில் இங்கு எத்தனை பேர் அமர்ந்திருக்கிறீர்களோ நான் அறியேன். பன்னிரண்டோ, பதினான்கோ பதினைந்து பேரோ அங்கு அமர்ந்திருந்தோம். திடீரென்று ஒரு ஊழியக்காரன் என்னை நோக்கி நடந்து வந்தார். "சகோ பிரான்ஹாமே, என் பெயர் இது... என்று கூறி விட்டு "கலிபோர்னியாவில் உமக்காகப் பொறுப்பெடுக்கிறவர்களில் நானும் ஒருவன் (Sponsor) என்றார். 111. "உம்மை சந்திப்பதற்காக சந்தோஷப்படுகிறேன். ஐயா என்று கூறினேன். டக்ளஸ் மக்ஹ்யூஸ். "உம்மை சந்திப்பதற்காக சந்தோஷப்படுகிறேன்” என்று கூறி அவருடன் கை குலுக்கினேன். 112. "நல்லது. உம்மை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்" என்று கூறினார். இங்கு டிரஸ்டியாக (கூடாரப்பொறுப்பாளர்) இருக்கும் ராய்ராபர்ஸன், சகோ.உட்.டெர்ரி பில்லி மற்றும் ஓ... சகோ. மக்நெல்லி. இன்னும் யாரெல்லாம் அங்கு நின்று கொண்டிருந்தார்களோ நான் அறியேன். "உம்மை ஒன்று கேட்க விரும்புகிறேன். கர்த்தர் எப்போதாவது உமக்கு தரிசனங்கள் தருவது உண்டா?” என்று கேட்டார். 113. "ஆம் சகோதரனே, ஆனால் அதையெல்லாம் விட்டு சற்று விலகி ஓய்வெடுக்க வந்திருக்கிறேன்” என்று நான் கூறினேன். (இவ்விதமாக சுற்றிப் பார்த்தபோது பருமனான டாக்டர் ஒருவர் அவரைப் பார்த்து, "ரெவரண்ட் மக்ஹ்யூஸ் அவர்களே, உம் கண்ணிலுள்ள இந்த அலர்ஜியானது சீக்கிரத்தில் உம் கண் பார்வையையே போக்கிவிடும். உமக்கு இரண்டு வருடமாக மருத்துவம் பார்க்கிறேன். இதற்கு மேலும் என்னால் ஒன்றும் செய்ய இயலாது” என்று கூறுவதைக் கண்டேன்.) நான் அவரைத் திரும்பிப் பார்த்து, "நீர் எதற்காக என்னைக் கேட்டீர் என்றால், அன்று உமது டாக்டர், "உம் கண்ணில் அலர்ஜி இருக்கிறது” என்று கூறினார்” என்றேன். ஏறத்தாழ பதினோரு மணி அளவில் நடுப்பகலாக இருந்தது. அவர் கண்களில் குளுமைக் கண்ணாடி அணிந்திருந்தார். "காரணம்... நீர் அதை அணிந்திருப்பது சூரிய ஒளியின் நிமித்தமாக அல்ல, உம்முடைய கண் நிமித்தமாகவே, நீர் உம்முடைய கண்ணை இழந்துவிடப் போகிறீர்” என்று அவர் உம்மிடம் கூறினார்”. அவர் கண்ணீர் விடத் தொடங்கினார். "அது உண்மை ” என்றார். 114. கையில் ஒரு நீண்ட பிடியுள்ள மண்வெட்டி (Shoe)யைப் பிடித்தபடி மறுபடியும் நடக்கத் திரும்பினேன். (நான் பார்த்தபோது அவர் கண்கள் பிரகாசமாக பளபளக்க என்னையே பார்த்துக் கொண்டு நிற்பதாகக் கண்டேன்.) "ஆனால் கர்த்தர் உரைக்கிறதாவது நீர் அந்தக் கண்ணை இழக்கப் போவதில்லை . "கடந்த இலையுதிர் காலத்தில் அவருடன் வேட்டையாடி கொண்டிருந்தேன். என்னையும் இந்தக் கூட்டத்தில் உள்ள அவரையும் விட தெளிவாகக் காணக்கூடியவர் அவர். ஆமாம். 115. வயதான பெண்மணி ஒருவர் காலுறைகளை (stocking) கீழே இறக்கிவிட்டு தன் பாவாடையை (skirt) பக்கவாட்டில் சற்று மேலே உயர்த்துவதைக் கண்டேன். "மகனே, சகோ. பிரான்ஹாமைக் கண்டாயானால் என் பாதத்துக்காக ஜெபிக்கும்படி அவரிடம் கூறு" என்று அவர்கள் கூறினார்கள். நான் பார்த்தபோது அந்தப் பெண்மணியின் பாதத்தைச் சுற்றிலும் கட்டிகள் காணப்பட்டன. 116. "உம் தாயார் நரைத்த தலையுடைய பெண்மணி, ("என் மகனே - பாருங்கள்) நீர் புறப்படும் முன்பாக நீர் என்னைப் பார்க்கும் பட்சத்தில் தன் பாதத்திற்காக நான் ஜெபிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்ளும்படி உம்மிடம் கூறினார்கள். அவர்கள் பாதத்தைச் சுற்றிலும் கட்டிகள் இருக்கின்றன” என்று நான் கூறினேன். அவர் மயக்கமே அடித்து விழுந்து விடுவார் போலிருந்தது. "அது உண்மை " என்றார். "அவர்களைக் கவலைப்பட வேண்டாம் என்று கூறுங்கள். அது சரியாகி விடும்” என்று கூறினேன். 117. நான் சுற்றி நடக்கத் தொடங்கின் போது தேவனுடைய சத்தம் பேசக் கேட்டேன். "சீக்கிரமாகப் பாதையை விட்டு ஓடிப்போங்கள்” என்று கூறியது. ராய் ராபர்ஸன் நின்று கொண்டிருந்தார். அவர் போரில் மிகுந்த அனுபவம் வாய்ந்தவர் என்று அறிந்திருந்தும் நான் அவர் தோளின் மீது என் கைகளை வைத்து, "சகோ, ராய், உங்களால் முடிந்த அளவு துரிதமாக மறைந்து கொள்ளுங்கள்” என்று கூறினேன். "என்ன விஷயம்? என்றார். "பாதையை விட்டு ஓடிப் போங்கள் மறைந்து கொள்ளுங்கள்” என்று கூறினேன். 118. என்னுடைய மண்வெட்டியைக் கீழே போட்டு விட்டு, சுற்றி நடக்கத் தொடங்கின்ே. என் தொப்பியையும் எடுத்து விட்டேன். இதோ, இங்கே அவர் வந்தார். தேவமகிமையானது சுழல் காற்றாக உருவெடுத்து அந்த மலையின் பக்கவாட்டில் உடைத்தெறிந்தது. அந்த இடத்தையே தகர்த்து அதிர வைத்தது. புதர்களின் மேல்பகுதி பிய்த்துக் கொண்டு என் தலைக்கு மேலாக மூன்று அல்லது நான்கு ஐந்து அடி உயரத்தில் பறந்தது. (சுழற்காற்றானது) ஒரு புனலைப் போலச் சென்று திரும்ப அதிர வைத்தது. இதோ வருகிறது. இவ்விதமாக மூன்று முறை. 119. மூன்றாவது முறைக்குப் பின் அது கடந்து சென்ற பின்பு சகோ. பாங்க்ஸ் வந்து “இதைக் குறித்துத்தான் கூறிக் கொண்டிருந்தீர்களா?” என்று கேட்டார். நான் “ஆமாம்” என்றேன். அவர், அது என்ன?” என்று கேட்டார். 120. நான், தேவன் சுழல் காற்றில் தரிசனமானார்” என்றேன். இதை மக்களிடம் கூறுவதை அவர் (தேவன்) விரும்பினாரா இல்லையா, நான் அறியேன். 121. நான் சற்று ஜெபித்தேன். நான் அவர்களிடம் சொல்லலாம் என்று அவர் கூறினார். "இது மேற்கு கடற்கரையைத் தாக்கும் நியாயத் தீர்ப்பு” என்று கூறினேன். இன்று அதைப் பாருங்கள். சிலமணி நேரம் கரித்து என்ன நடந்தது என்று பாருங்கள். அலாஸ்கா தண்ணீரில் மூழ்கியது. இப்போது முழுப்பகுதியுமே கீழே போய்க் கொண்டிருக்கிறது. நாம் நியாயத் தீர்ப்பில் பிரவேசித்திருக்கிறோம். இரக்கமானது நீக்கப்படுகின்றது. 122. ஆனால், தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக, இந்தக் கடைசி நாட்களில் தம் ஜனத்தின் மத்தியில் உறுதிப்படுத்தப்பட்ட, இயேசு கிறிஸ்துவைப்பற்றின் வெளிப்படுத்தலின் நன்மை. கிருபை ஆகியவற்றின் மீது சார்ந்து ஜீவிக்கத்தக்கதான மறைவான ஆகாரத்தை ஆவிக்குரிய ஆகாரத்தை நாம் பெற்றிருக்கிறோம். ஆமென். அவர்கள் அதற்குள்ளே சென்று விட்டனர். பஞ்சம் துவங்கும் முன்பாக எலியா உள்ளே (மறைவான இடத்திற்கு) சென்று விட்டான். நியாயத்தீர்ப்புக்கு முன்பாக உள்ளே வந்து விட்டதற்காக தேவனுக்கு ஸ்தோத்திரம். நாம் வெளியே வந்து உள்ளே போகும் நேரம் இது. அந்த ஸ்தாபனங்களில் இருந்து வெளியே போகும் நேரம் இது. அந்த ஸ்தாபனங்களில் இருந்து வெளியே வந்து கிறிஸ்துவுக்குள்ளாக போவது, எல்லா உண்மையான விசுவாசிகளுக்கும் வெளியே வருவதும் உள்ளே போவதுமான நேரம். 123. அவன் அழைக்கப்பட்டு அங்கேயே தங்கியிருந்தான். நினைவிருக்கட்டும். தேவன் அவனை அழைக்கும் மட்டுமாக அவன் ஆற்றை விட்டு விலகவே இல்லை. 124. ஏறத்தாழ பஞ்சம் முடிந்தவுடன், தேவன் அங்கேயிருந்து அவனை அழைத்து ஒரு விதவையின் வீட்டிற்கு அனுப்பினார். கவனியுங்கள். அவர் இந்த விதவையினிடம் அழைத்தார். இந்த விதவை அவிசுவாசிகளுடன் (பழைய காலத்தில் மிருகத்தின் முத்திரையைத் தரித்துக் கொண்டார்கள்). தொடர்பு இல்லாதிருந்தாள். ஆகவே அவர் என்னை அழைத்தார்......... இந்த விதவையை ஆதரிக்குமாறு எலியாவை அழைத்தார். ஒரு சின்ன அடை மாத்திரம் அவர்களுக்கு இருந்தது. அவள் சார்ந்திருந்த சிறு வஸ்து அதுவே. எலியா, "முதலில் எனக்கு அதைத் தா. ஏனென்றால் பூமியின் மீது தேவனாகிய கர்த்தர் மழையைக் கட்டளையிடும் நாள் மட்டுமாக பானை வெறுமையாகிப் போவதுமில்லை. கலசத்தில் எண்ணெய் வற்றிப் போவதும் இல்லை என்று கர்த்தர் உரைக்கிறார்” என்றான். தேவனை முதலாவதாக வைத்தல் அவருடைய வார்த்தையை முதலாவதாக வைத்தல் 125. கவனியுங்கள், பானையில் மாவு இருந்தது. ஒவ்வொரு முறையும் அவள் மாவிற்காகப் போனபோது பானையில் மாவு இருந்தது. ஒவ்வொரு முறை அவள் எண்ணெய்க்காகப் போன போது கலசத்தில் எண்ணெய் இருந்தது. ஏன்? போஜன பலியில் மாவானது கிறிஸ்துவைக் குறிக்கின்றது. (லேவி 23:13) மாவில் உருண்டைக் கட்டிகள் சரியாக்கப்பட வேண்டும். ஒவ்வொன்றையும் சரியாகக் கரைக்க வேண்டும். மாவில் உள்ள ஒவ்வொரு உருண்டைக் கட்டியும் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார் என்பதைக் காண்பிக்கிறதாய் ஒன்றாகவே இருக்கின்றன. வார்த்தையை உறுதிப்படுத்த செய்தியைப் பின் தொடரும் ஜீவ அப்பமாகிய வார்த்தை அதுவே. 126. இன்றும் அது அவ்விதமாகவே இருக்கிறது. நண்பர்களே, இன்றும் அவ்விதமாகவே, பஞ்ச காலத்தில் அவர்களை ஆதரிக்கத்தக்கதாக பிள்ளைகள் புசிக்கும் ஜீவ அப்பமானது தேவனுடைய செய்தியை தொடர்ந்தே செல்கிறது. இன்று அவர் நம் மத்தியில் வந்து நின்றால் எப்படி இருக்கும். இந்த வேளையில் அவர் நம் மத்தியில் வந்து நின்றால் எப்படி இருக்கும்? இந்த பூமியின் மீது அவர் மாம்சத்தில் வந்திருந்த நாட்களில் எவ்விதமாக கிரியை செய்தாரோ அவ்விதமாகவே கிரியை செய்வார். மணவாட்டியானவள் மணவாளனின் ஒரு பகுதியாகவே இருக்கிறாள். சபையானது கிறிஸ்துவைப் போலவே இருக்கிறது. "நான் செய்யும் கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்.” வார்த்தையே அதைச் செய்தது. அவர் செய்த காரியங்களையே நாமும் செய்வோம் என்று கூறியிருக்கிறார். 127. மறுபடியும் நாம் கவனிக்கிறோம். அந்த நாளில் வார்த்தையானது எலியாவினிடத்திற்கு வந்தது போல நம்மிடத்திலும் வந்திருக்குமானால் அவன் செய்த காரியத்தையே இப்போதும் செய்யும். உலகத்திற்கு மறைக்கப்பட்ட தேவனுடைய ரகசியமான காரியங்களை அவன் புசித்தது போல, ஓ மீண்டுமாக அது செய்தியையும் செய்தியாளரையும் ஒன்றாக ஆக்குகிறது. ஆவிக்குரிய ஆகாரம் தயாராக இருக்கிறது. அது இப்போதைய காலத்தில் வந்திருக்கிறது. நீங்கள் அதை விரும்பினால், இந்த தரத்திற்கான அவிசுவாசத்திலிருந்து வெளியே வர விரும்பினால் கிறிஸ்துவுக்குள்ளாக அவருடைய வாக்குத்தத்தத்திற்குள் வர ஆயத்தாய் இருப்பீர்களானால், உங்களில் ஒவ்வொருவரும் இந்த ஆகாரத்தைப் பெற்றுக் கொள்ளலாம். அவர் இந்தக் கடைசி நாட்களில் என்னவெல்லாம் செய்வார் என்று மல்கியா:4, லூக்:17:30, யோவான் 14:12 (இதைக் கூறும் வேத வசனங்கள் எவ்வளவு இருக்கின்றன) யோவேல் 2:28 ஆகியவைகளில் அவருடைய வாக்குத்தத்தங்களை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். எவ்விதமாகத் தீர்க்கதரிசி இந்தக் கடைசி நாட்களில் வெளிச்சம் உண்டாயிருக்கும் என்று கூறினது, அது எவ்விதமாக கிரியை செய்யும் என்னவெல்லாம் நடப்பிக்கும், எல்லா வேத வாக்கியங்களும் இந்தக் கடைசி நாட்களையே சுட்டிக் காண்பிக்கின்றன. அது கிறிஸ்துவே நீங்கள் அதிலே, அந்த ரகசியமான இடத்திலே மறைந்து கொள்வீர்களானால் நீங்கள் புசிக்கலாம். தேவனுடைய நன்மைகளையும் கிருபையையும் காணலாம். ஒரு வேளை சுகவீனமாக இருப்பீர்களானால் அங்கே பரிகாரம் உண்டு. 128. நினைவில் கொள்ளுங்கள். பின்பு எலிசா அங்கு வந்திருந்தபோது. .......... கிறிஸ்துவைக் குறிக்கும் போஜன பலியை அவன் பெற்றுக் கொண்ட போது, அதைக் கொண்டு விதவைகள் வீட்டைப் பராமரித்தான். கவனியுங்கள். பிறகு அவன் வானத்திலிருந்து அக்கினியை அழைத்த போது தீர்க்கதரிசியின் ஆவியானது அவன் தேவனால் அனுப்பப்பட்டவன் என்பதை நிரூபித்தது. 129. கவனியுங்கள். வனாந்திரத்திலே அவன் சூரைச் செடிகளின் கீழாகப் படுத்திருந்தபோது ஒரு தூதன் அதே விதமான மாவிலே சுடப்பட்ட அடைகளைக் கொண்டு வந்து அவனை சாப்பிட வைத்தான். சிறிது நேரம் அவர் அவனை உறங்க விட்டு மறுபடியும் தூதன் அவனை எழுப்பி இன்னும் சில அடைகளைக் கொடுத்தான். அந்த போஜனத்தின் பலத்தினால் அவன் நாற்பது நாட்கள் நடந்து சென்றான். தேவனுக்கு மகிமை அவர் நேற்றும், இன்றும் என்றும் மாறாதவர். ஓ, எவ்வளவாக நாம் அவரை நேசிக்கிறோம். அதன் காலத்தின் ஆவிக்குரிய ஆகாரம். ஆமென். 130. "பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க் குட்டிக்குப் போடுவது நல்லதல்ல இவ்விதமாக இயேசு அந்த சிரோபேனிக்கேயா ஸ்தீரியினிடம் கூறவில்லையா? அவருக்கு சொந்தமானவர்களிடத்தில் அவர் அனுப்பப்பட்டார். அது சரிதான். அவர்களுக்காகத்தான் அவர் வந்தார்... அவர் புறஜாதியிடத்தில் ஒரு போதும் செல்லவில்லை. 131. இப்போது இந்த நாளிலோ அவர் புற ஜாதியாரை அவர்களுடைய காலத்தில் சந்திக்கிறார். (இந்த இடத்தில் தீர்க்கதரிசி "it is not meet". என்று தொடங்கி விட்டு விடுகிறோம். பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது நல்லதல்ல என்று தொடங்கும் ஆங்கில வசனத்தின் முதல் பகுதி அது - தமிழாக்கியோன்). 132. "அந்த செய்தி ஏன் ஸ்தாபன சபை போன்ற பெரிய பெரிய இடங்களுக்குப் போவதில்லை?” என்று நீங்கள் கேட்கலாம். 133. இது அவர்களுக்குரிய ஆகாரமல்ல. சபை என்று தன்னை அழைத்துக் கொள்ளும் ஸ்தாபனத்தின் ஆகாரமல்ல. மணவாட்டியின் ஆகாரம். காலத்திற்கேற்ற ஆவிக்குரிய ஆகாரம். இது அவர்களுடைய (ஸ்தாபன சபை) வயிற்றில் கோளாறு உண்டாக்கி அவர்களை சுகவீனமாக்கி விடும். அவர்களுக்கு பலமான ஆகாரம். பாருங்கள்? பாருங்கள் இது? நீங்கள் அதை செய்யக் கூடாது. ஆனால் (தேவனுடைய) பிள்ளைகளுக்கு அதுதான் அப்பம். அதுதான் ஜீவன். அதுதான் நேற்றும், இன்றும், என்றும் மாறாத இயேசு கிறிஸ்து. ஆமென். 134. நாம் ஜெப வரிசையை இப்போது தொடங்கா விட்டால் நமக்கு மிகவும் நேரமாகி விடும். ஆகவே சிறிது நேரம் நம் தலைகளை வணங்குவோம். 135. அன்பான தேவனே, ஏற்ற வேளையில் ஆவிக்குரிய ஆகாரம். இந்த உலகம் அறிந்திராத ஒரு காரியம் எலிசா நடந்து சென்று, "நான் உரைத்தாலன்றி பனி கூட பெய்யாது என்று கூறின் அதே இடத்தில், சமாரியாவில், நம்முடைய . . . கர்த்தரும் அந்தப் பகல் வேளையில் சொல்லக் கேட்டோமே, இயேசு நின்று கொண்டு தம் சீஷர்களிடம் பேசினார். "ரபி, போஜனம் பண்ணும்.” அதற்கு இயேசு, "நீங்கள் அறியாத போஜனம் எனக்கு உண்டு” என்றார். 136. மெய்யாகவே கர்த்தாவே, தேவனுடைய கிரியைகளை அவருடைய வேளையில் வெளிப்படுத்தப்படுவதான அவருடைய சித்தத்தை செய்வதே அவருடைய (கிறிஸ்துவினுடைய) போஜனமாய் இருந்தது. அது அவ்விதமாக நிகழ்வதை காண்பதற்காகவே அவர் அங்கிருந்தார். "முதலில் என் பிதாவானவர் எனக்கு எதைக் காண்பிக்கிறாரோ, அதைத் தவிர வேறு ஒன்றையும் செய்யேன். பிதாவானவர் எதைக் காண்பிக்கிறாரோ அதையே நான் செய்கிறேன். 137. பிதாவே, இன்றும் அது அவ்விதமாகவே இருக்கிறது. உண்மையான சபை, உண்மையான விசுவாசி. விசுவாசிகளின் சரீரமானது, ஆகாரத்தை பெற்றுக் கொள்ளும் வழியை அறிந்திருக்கிறார்கள். இந்த ஆகாரத்தை உலகமானது அறிந்திருக்கவில்லை. பிதாவே ஆனால் உம்முடைய சபை உம்முடைய ஜனம், உம் குமாரனுடைய மணவாட்டி அதை நேசிக்கிறாள். ஆமென். 138. வைத்தியர்கள் தோல்வியடையும் போது எங்கள் சரீரத்திற்கான பரிகாரத்தை அடையும் வழியைப் பெற்றிருக்கிறோம். அதற்கான வழியை அறிந்திருக்கிறோம். தேவன் சபைக்கு அளித்திருக்கும் ஆகாரங்களில் இதுவும் ஒன்று. அவரை விசுவாசிக்கும் பிள்ளைகளுக்கு இந்தக் கடைசி நாட்களில் இதை வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். பிதாவே விசுவாசிக்கும் பிள்ளைகளாய் இருக்கும்படி எங்களுக்கு உதவி செய்தருளும். ஏனென்றால் விசுவாசிப்பவர்களுக்கு எல்லாம் கூடும். அதைத் தந்தருளும். தேவனே, இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 139. அவர்கள் சில ஜெப அட்டைகளை விநியோகித்திருப்பதாக பில்லி கூறினான் என நினைக்கிறேன். அந்த ஜெப அட்டைகளின் மீது என்ன எழுத்து இருக்கிறது என்பதை யாராவது கூறினால் எனக்குப் போதுமானது. “சி” (C) நல்லது. முதலில் சி ஒன்றை எடுத்துக் கொள்வோம். அதில் தொடங்கி ஒரு சின்ன வரிசை தொடங்கும் மட்டுமாக செல்வோம். பாருங்கள். அதெல்லாம் இப்போது முடிந்து விடும். இப்போது ஒவ்வொருவரும் நல்லது பாருங்கள். இதை இப்போது செய்யப் போகிறேன். நாம் அதை செய்யலாமா வேண்டாமா என்று நான் அறியேன். அல்லது அழைப்பு வரிசை ஏற்படுத்தலாம். நீங்கள் அமர்ந்திருக்கும் அதைக் குறித்து எனக்கு ஒன்றுமில்லை. நீங்கள் இங்கு மேடையின் மீதும் வரலாம். அல்லது அழைக்கப்படலாம் எப்படி வேண்டுமானாலும் செய்யலாம். நான் முற்றிலுமாக பரிசுத்த ஆவியையே சார்ந்திருக்கிறேன். நான் பிரசங்கித்த இந்த வார்த்தையை காக்கும்படி அவர் மீது சார்ந்திருக்கிறேன். 140. சகோ. ஜார்ஜ் ரைட். நான் அதை விசுவாசிக்கிறேன். சிறு பையனாக, பல வருஷங்களுக்கு முன்பு உம்முடைய வீட்டிற்கு வந்து, மரத்தில் அமர்ந்திருக்கும் பழைய விப்பூர்வில் பறவையின் (வட அமெரிக்காவிலுள்ள ஒரு பறவை) குரலை ரசித்த அப்பொழுது முதல் இந்த மட்டும் நான் அதே செய்தியையே விசுவாசிக்கிறேன். அது மாறாதது என்று விசுவாசிக்கிறேன். 141. நல்லது. ஜெப வரிசைக்காக ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள். நல்லது ஜெப அட்டை சி. நம்பர் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து முதலில் வந்து இங்கு நில்லுங்கள். உங்களால் எழுந்திருக்க முடியாவிட்டால் கரங்களை உயர்த்தினால் போதும். யாராவது வந்து உங்களை இங்கு கொண்டு செல்வார்கள். ஏன்...... ஆம். ஜெப அட்டை சி. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து இப்போது கவனியுங்கள். ஜெப அட்டை இல்லாதவர்கள். 142. பல காலமாக இவ்விதமான முறையில் ஜெப வரிசையை நான் ஒழுங்கு செய்யவில்லை. இங்கு கூடாரம் கட்டப்பட்ட சமயத்தில் எனக்களிக்கப்பட்ட ஊழியத்தை எத்தனை பேர் நினைவு கூருகிறீர்கள்? அவர் கூறினார். "ஒரு சுவிசேஷனுடைய வேலையைச் செய். நான் ஒரு சுவிசேஷகன் என்று அவர் கூறவில்லை . "ஒரு சுவிசேஷகனுடைய வேலையைச் செய்” என்று கூறினார். “பாருங்கள், ஏனென்றால் நேரம் வரும். அப்போது அது மாற்றப்படும். அந்த நேரம் வந்துக் கொண்டிருக்கிறது நல்லது. 143. இப்போது, இதில் அவர் ................ இரண்டு மூன்று வித்தியாசமான ஊழியங்களை நீங்கள் ஒன்றாகக் கலக்க முடியாது மேய்ப்பனும் சுவிசேஷகனுமாக ஒரே சமயத்தில் இருந்தது போன்று, ஒரு தீர்க்கதரிசியாகவும் அதே வேளையில் மேய்ப்பனாகவும் நீங்கள் இருக்க முடியாது. ஏனென்றால் உங்களுக்கு இருப்பது வேறுபட்ட கிரியைகள், வேறுபட்ட ஊழியம். 144. ஆனால் என் செய்தியில் நான் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கர்த்தர் தந்திருக்கிறார். "ஒரு சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தைக் குறித்த முழு உத்திரவாதத்தை ஏற்படுத்து. ஏனென்றால் நேரம் வருகிறது. அப்போது அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மாட்டார்கள்." இப்போது அதுவராதிருக்குமானால் ஒவ்வொரு ஸ்தாபன சபையும் ஆரோக்கியமான உபதேசத்தை பொறுக்க முடியாமல் என்னைப் புறக்கணித்தார்கள். "ஆனால் அவர்கள் தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களை தங்களுக்கு சேர்த்துக் கொண்டு கட்டுக்கதைகளுக்கு சாய்ந்து போவார்கள். மோசேக்கு விரோதமாக எதிர்த்து நின்ற யந்நேயும் யம்பிரேயும் போல தங்கள் சுயநலத்திற்காக மகத்தான காரியங்கள் செய்வார்கள். ஆனால் அவர்களுடைய மதியீனம் வெளிப்படும்.” பாருங்கள்? பாருங்கள்? நல்லது. ஒருவரைப் போல் போலியாக நடப்பித்தல் (Impersonations) நீங்கள் பார்க்கிறீர்கள். எவ்விதமாக யம்பீரே............... 145. வேதத்தின் ஒரு பக்கத்தில் எழுதப்பட்டு இந்த கூடாரத்தின் மூலைக்கல்லில் வைக்கப்பட்டு 1933 முதல் அங்கேயிருக்கும் அதைப் பரலோத்திலுள்ள தேவன் அறிவார். அவர்கள் அதை எப்படி செய்தார்கள் என்று பாருங்கள். என்ன நிறைவேறுகிறது என்று பாருங்கள். அப்பட்டமாக ஒருவரைப்போலப் போலியாக நடித்தல் "அவர்கள் அவ்விதமாகவே இருக்கட்டும். அவர்களுடைய மதியீனம் யம்பிரேயும் யந்நேயும் போல அதேவிதமாக வெளிப்படும் '' என்றார். இதோ, அந்த நாளில் நாம் இருக்கிறோம். 146. நாம் மூலைக்கல்லை நாட்டின்போது ஆலயம் எவ்விதமாக காணப்பட்டது என்று நான் காண்கிறேன். மக்கள் ஜன்னல் பகுதியில் தொங்கிக் கொண்டும் கூடாரத்தின் சுவரைச்சுற்றிலும் நின்று கொண்டும் இருந்தனர். அங்குதான் இருக்கிறது விஷயம். அது கட்டப்பட்டு வந்த சமயத்தில் இந்த நகரத்தின் மக்கள், "இன்னும் ஆறுமாத காலத்திற்குள்ளாக. . . . . ” என்றார்கள். ஒரு டாலரும் எண்பது செண்டும் வைத்துக் கொண்டு கூடாரம் கட்டத் தொடங்கின போது இது தங்களுடைய கார்ஷெட்டாக ஆகிவிடும் என்று கார் வைத்திருந்தவர்கள் அநேகர் தீர்மானமாக இருந்தார்கள். ஆனால் இது தேவனுடைய ஆட்டுத் தொழுவமாகவே இன்னமும் இருந்து கொண்டிருக்கிறது. 147. ஒன்று, இரண்டு, மூன்று, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து நல்லது. 148. "கர்த்தராகிய நான் இதை நட்டேன். ஒருவனும் அதை என் கரத்திலிருந்து பறித்துக் கொள்ள முடியாதபடி அதற்கு நான் பகலிலும் இரவிலும் நீர் பாய்ச்சுகின்றேன்.” விமர்சனத்தை கவனித்துப் பாருங்கள். எந்த ஸ்தாபனமும் பின்னால் நின்று இதைத் தாங்காது. இந்த தேசத்தைச் சுற்றிலும் எங்கும் இதைப் போன்ற சபை எதுவும் இல்லை. இதை ஆதரிக்கும் தேசத்தில் பெந்தேகோஸ்தேயினரோ அல்லது ஒன்றும் இல்லை. எல்லோரும் தண்ணீர் ஞானஸ்நானத்திற்கும் மற்ற காரியங்களுக்கும் விரோதமாக இருக்கிறார்கள். என்னுடைய சொந்தக் குடும்பத்திலேயும், என் தகப்பனார் என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டார். என் உடைகளை ஒரு சிறிய காகித உறையில் எடுத்துக் கொண்டு வெளியேறி, நியூ அல்பேனிக்குச் சென்று அங்கு வாழ்ந்தேன். அது சரிதான். ஆனால் அநேக ஆபத்துக்கள், கடினவேலை, கண்ணிகள் மூலம் ஏற்கனவே கடந்து வந்து விட்டேன்' கிருபையே என்னை இம்மட்டாய் பத்திரமாய் கொண்டு வந்தது. (எனக்கு ஐம்பத்தி ஆறு வயதாகிறது. சீக்கிரத்தில் ஆற்றைக் கடக்க வேண்டியவனாய் இருக்கிறேன்.) கிருபையே என்னை மேலும் கொண்டு செல்லும். அங்கே நான் பத்தாயிரம் வருஷம் இருக்கும் போது பிரகாசமாக சூரியனைப் போல ஒளிவீசிக் கொண்டு முதலில் நாம் தொடங்கினதைக் காட்டிலும், தேவனைப் பாடித்துதிக்க குறைந்த நாட்கள் நமக்கில்லையே ஓ, நான் எவ்வளவாய் இயேசுவை நேசிக்கிறேன். எனக்கு சர்வ உலகமும் அவர்தான் 149. ஓ, நல்லது, நான் எத்தனை........... எங்கு நான் விட்டேன். பத்தா? இன்னும் சிலரை நாம் சேர்த்துக் கொள்ளலாமா நல்லது. அது என்ன பத்தா? பதினைந்து, நல்லது, சி. பத்து முதல் பதினைந்து முடிய. நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கே எழுந்து நின்று வந்து விடுங்கள். என்ன கூறுகிறீர்கள்? என்ன நல்லது. அப்படியானால் சி.பதினைந்து முதல் இருபது மட்டும் இருக்கட்டும். பத்துபேர் அதிகமாகின்றனர். நாம்.......... வரிசை எங்கு நிற்கிறதோ அங்கு நாங்கள் வர இயலாது. வந்தால் கும்பலாகி விடும். பிறகு நாங்கள்........... நல்லது. 150. இப்போது சிதறாத கவனத்தை என் மீது வையுங்கள். நாங்கள் நேரம் கடத்த மாட்டோம். இப்போது ஓ, என்ன மணிவேளை, என்ன நேரம் ஒவ்வொருவரும் கர்த்தரை நேசிக்க வேண்டும் என வாஞ்சிக்கிறேன். இந்த நிமிஷத்தின் மறைந்திருக்கும் சக்தியை உணரத்தக்கதான நிலைக்கு நாம் எல்லோரும் கொண்டுவரப்பட வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். நாம் அதை முயற்சிப்போம். உங்கள் கவனத்தை மாத்திரம் என் மீது வையுங்கள். 151. நாம் இங்கே என்ன செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்? தேவனுடைய வார்த்தையை ஒரு சோதனையில் வைக்கிறோம். எலியாவும் அதே காரியத்தை செய்தான். அந்தக் காரியத்தை செய்யத் தக்கதாக, தான் தேவனால் அனுப்பப்பட்டவன் என்பதை அவன் அறிந்துக் கொண்ட பிறகே அந்த மலையின் மீது சென்றான். "யார் தேவன் என்பதை நிரூபிப்போம். அக்கினியினால் பதில் கொடுக்கும் தெய்வமே தெய்வம்” என்றான். 152. அந்தப் புறஜாதியார் : தங்களைக் கீறிக்கொண்டு, ஓ "நல்லது, உண்மையாக......... என்றார்கள். வானத்திலிருந்து அக்கினி வந்து விழாது என்று எண்ணி உரத்த சத்தமாய் அலறி தாங்கள் ஜெயித்து விடலாம் என்று நினைத்தார்கள். 153. ஆனால் எலியாவே அது (அக்கினி) வானத்திலிருந்து விழும் என்று அறிந்திருந்தான். ஏனென்றால், கர்த்தரிடத்தி லிருந்து ஒரு தரிசனத்தை அவன் பெற்றிருந்தான். நீங்கள் “அவன் தரிசனம் கண்டானா? என்கிறீர்கள். 154. ஆம் ஐயா அவன் எல்லாவற்றையும் கிரமமாக ஒழுங்கு செய்து விட்டு, "கர்த்தாவே, உம்முடைய கட்டளையின் படியே இவையெல்லாம் செய்து முடித்தேன்" என்றான். பிறகு அக்கினி விழத் தொடங்கினது. தேவனுடைய வார்த்தையை எழுத்துக்கு எழுத்து கைக்கொள்ளும் போது மீதி காரியங்களைப் பொறுப்பெடுத்துக் கொள்வது தேவனுடைய வேலையாகி விடுகிறது. அதை ஏற்பாடு செய்யும்படி மட்டும் நீ அழைக்கப்பட்டிருக்கிறாய் என்பதை தெளிவாக அறிந்துக் கொள். அவ்விதமாக நீ செய்யும் போது மீதியை அவர் பார்த்துக் கொள்வார். 155. நான் ஜெபிக்கப் போகும் இந்த வரிசையின் வழியாக எல்லாரும் வருவார்கள்... எப்படி..... நல்லது, வரிசை தொடங்குவதற்கு சுவர் மட்டும் வந்திருக்கிறீர்கள். இப்போது முதலில், குறைந்த பட்சம் இந்தக் கட்டிடத்தில் எங்கோ சில மக்கள்......... ஜெப அட்டை இல்லாமல் சுகவீனமாக இருப்பவர்கள் எத்தனை பேர் இருக்கிறீர்கள். கையை உயர்த்துங்கள். பாருங்கள் எல்லா இடத்திலும், நீங்கள் அறிவீர்கள். ஒருவேளை நம் கர்த்தரும். ...... அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராக இருந்தால் அவரும் ஜெப வரிசைகளை அமைத்திடுவார். திரளான ஜனங்கள் பெரிய வரிசைகளில் அவரிடம் வந்தனர். அவர் அவர்களைத் தொட்டு ஆசீர்வதித்தார். ஒரு சமயத்தில் அவர் நின்று, "யார் என்னைத் தொட்டது?” என்றார். சுற்றும், முற்றும் பார்த்துவிட்டு ஒரு ஸ்திரீயினிடம், தன்னை அவள் ஏன் தொட்டாள் என்று கேட்டார். அவளுடைய உதிரப் பெரும்பாடு போய் விட்டது என்றும் அவளுடைய விசுவாசம் அவளை சொஸ்தமாக்கிற்று என்றும் கூறினார். 156. அவள் திரும்பி, "கர்த்தாவே, நான் அறியேன், இது வெகுகாலமாகவே இருந்து கொண்டிருக்கிறது?” என்று கூறியிருந்தால் எப்படி இருக்கும்? அவ்விதமாக நடந்திருக்காது இல்லை. அவ்விதமாக நடந்திருக்காது. இல்லை . 157. சீரோபேனிக்கேயா ஸ்தீரியிடம், "உன் மகளைப் பற்றி நீ சொன்ன வார்த்தையின் நிமித்தம் பிசாசு அவளை விட்டு நீங்கிற்று” என்று அவர் கூறியிருந்தால்? அவள், "இப்போது கர்த்தாவே, நீர் இவ்விதம் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று கூறியிருந்தால் எப்படி இருக்கும்? பிசாசு இன்னும் அவளிடம் இருந்திருக்கும். அவள் பிள்ளையை எவ்விதம் காண்பாள் என்று அவர் கூறினாரோ அவ்விதமாகவே காண விரும்பினாள். 158. அவர் நம்மிடம், "நீங்கள் விசுவாசித்தால் எவ்வளவு நலமாய் இருக்கும் இந்த மலையைப் பார்த்து பெயர்ந்து போ” என்று கூறி, உங்கள் இருதயத்தில் சந்தேகப்படாமல், நீங்கள் சொன்ன விதமாகவே நடக்கும் என்று விசுவாசித்தால் அவ்விதமாகவே நடக்கும். நீங்கள் ஜெபிக்கும் போது பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசித்தால் அது உங்களுக்குத் தரப்படும்.” எப்படிப்பட்ட ஒரு வாக்குத்தத்தம். 159. சுமூகமான சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும் ஒரு மனிதன் இதையெல்லாம் விசுவாசிப்பதில்லை. அவன் வாசற்படி மட்டும் வந்து நின்று, உள்ளே பார்த்து விட்டு, "நல்லது, இன்னொரு பரிசுத்த உருளைக் கூட்டம் என்று கூறி விட்டு சென்று விடுவான். பாருங்கள்? மறைவான ஆகாரம் என்பதை அவன் அறியமாட்டான். அவனுக்கு மறைக்கப்பட்டிருக்கும் இரகசியமான காரியம் இது என்பதை அவன் அறியமாட்டான். அவன் அதை அறியவில்லை. ஒரு சிந்தையானது நிர்வாணமாயும் பரிதபிக்கப்படத் தக்கதாயும், குருடாயும் அறியாததாயும் இருந்தால் அது பரிதாபமானது. பாருங்கள்? அது மோசமான காரியம். 160. ஓ தேவனே, அவ்விதமாக என்னை ஆக்கிவிடாதேயும். அதை விட நான் மரித்துப் போகிறேன். இவ்விதமாக நான் இருப்பதைக் காட்டிலும் நான் மரித்து விடுவேன். (ஆம், ஐயா) நாம் ஒவ்வொருவரும் அவ்விதமாகவே இருப்போம். இல்லையா? 161. ஆனால் தேவன் இவையெல்லாவற்றையும் இந்தக் கடைசி நாட்களில் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். மல்கியா 4ல் இயேசுகிறிஸ்து மாம்ச சரீரத்தில் தாமே வந்து சோதோமிலே என்ன செய்தாரோ அதையே செய்து காண்பிப்பார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது சரிதான். உலகமானது சோதோமின் நிலைமையில் இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. "அவ்விதமாகவே மனுஷகுமாரன் வெளிப்படும் நாளில் இருக்கும்” என்று கூறுகிறது. பாருங்கள். ஆபிரகாமிடத்தில் மனித உருவில் வந்த ஏலோயீமாகிய இந்த மனிதன் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பிள்ளை வருவதற்கு முன்னாக வந்தார். அது என்னவென்று பாருங்கள். ஆபிரகாம் அதை தேவன் என்று கூறினான். அங்கே அவனிடம் மூன்று பேர் வந்தனர் என்றும், பிரயாணத்தினால் உடையில் அழுக்கு படிந்திருந்தது என்றும், அவர்கள் அமர்ந்து மனிதனை போல புசித்தார்கள் என்றும் வேதம் கூறுகிறது. இயேசு கூறினார், உலகமானது சோதோமின் நிலைக்குள் வரும் போது மனுஷகுமாரன் தாமே மீண்டும் வெளிப்படுவார். (தேவகுமாரன் அல்ல) மனுஷகுமாரன், பாருங்கள், தாமே வெளிப்படுவார்.” 162. இப்போது கடைசி தீர்க்கதரிசி சொன்னதை குறித்துக் கொள்ளுங்கள். "இதோ தீர்க்கதரிசியாகிய எலியாவை உங்களிடத்திற்கு அனுப்புகிறேன். அவன் பிள்ளைகளுடைய இருதயத்தை பிதாக்களுக்குத் திருப்புவான்" பாருங்கள்? அவர்களை வேதத்தின் பக்கமாகத் திருப்பிக் கொண்டு வரும் செய்தி. அந்த நாளில் மனுஷகுமாரன் தாமே தம்மை வெளிப்படுத்துவார். கடைசி சபையின் காலத்தில் ஏழாம் தூதன் எக்காளம் ஊதும்போது தேவ ரகசியங்கள் அந்த நாளில் விளக்கிக் காட்டப்படும். ஏழு முத்திரைகளும் உடைக்கப்படும். இந்த சபைகளையும் அதன் காரியங்களையும் குறித்த ரகசியங்கள், அவை எப்படி நிகழ்ந்தன.......... என்ன நடந்தது என்பன. 163. பாருங்கள், அவர்கள் அதை அறியவில்லை . இயேசு கூறினார். "குருடரான பரிசேயரே "குருடன் குருடனுக்கு வழி காண்பித்தால் இருவரும் குழியில் விழுவார்கள் அல்லவா? என்றார். பாருங்கள். மக்கள் அதை காணாதிருப்பதின் காரணம் அதுதான். 164. அதன் ரகசியம் என்னவென்றால், அந்த முத்திரைகள், அந்த சபைகள் ஒவ்வொன்றும் ஸ்தாபனமாகி அதிலேயே அடங்கி விட்டன. தேவனுக்கு முன்பாக தவறாக இருக்கும் ரகசியமான காரியங்களில் இதுவும் ஒன்று. டாக்டர் லீ அவர்களே, அதை உங்களால் காணமுடிகிறதா, கவனியுங்கள். ரகசியங்களில் ஒன்றான அந்தக் காரியம் தான் அது. அவர்கள் ஸ்தாபனமாகி தேவனுடைய சித்தத்திற்கு முற்றிலுமாக புறம்பாகி விட்டார்கள். கடைசி நாட்களில் இந்தக் காரியங்கள் வெளியாக்கப்பட்டு மக்களை மதக்கோட்பாட்டை நோக்கி அல்ல, அல்லது ஸ்தாபனத்தை நோக்கி அல்ல, உண்மையான வார்த்தையை நோக்கி நடத்தும். உண்மையான வார்த்தையானது ஜனங்களிடத்தில் ஒரு குறிப்பிட்ட கூட்டத்திற்கு மாத்திரம் வரும். அவர்கள் மத்தியில் மனுஷகுமாரன் தம்மை "நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர்” என்று வெளிப்படுத்துவார். 165. ஓ அதை நான் நேசிக்கிறேன். அவரை மேன்மை பாராட்ட விரும்புகிறேன். மக்களுக்கு முன்பாக அவர் பெரியவர் என்று காண்பிக்க விரும்புகிறேன். நான் அவரை பெரியவராக்க வேண்டியதில்லை. அவர் ஏற்கனவே பெரியவராக இருக்கிறார். மேல்புறமாக நீ அவரை கடந்து போக முடியாதபடி அவர் மிகவும் உயர்ந்திருக்கிறார். கீழ்ப்புறமாக நீ கடந்து போக முடியாதபடி அவர் மிகவும் ஆழமானவராக இருக்கிறார். சுற்றிக் கொண்டு கடந்து போக முடியாதபடி அவர் மிகவும் பரந்திருக்கிறார். இருந்தபோதிலும் அவர் இருக்கத்தக்கதான ஒரு இடத்தை உன் இருதயத்தில் பெற்றிருக்கிறாய். அவரை ஏற்றுக் கொள்ள மாட்டாயா? நம்முடைய ஆண்டவர் எவ்வளவு அற்புதமானவர் நல்லது. 166. இப்போது நாம் ஒவ்வொருவரும் மிகவும் அமைதியாக இருப்போம். இதைக் குறித்து நாம் பேசியிருக்கிறோம். அது உண்மைதானா என்பதே காரியம். இங்கு ஒரு வேளை சில அந்நியர்கள் இருக்கக்கூடும். கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருந்தால் இந்த நிமிஷத்தில் அவர் என்ன செய்வார் என்று உங்களை கேட்கிறேன். முன்பு அவர் இங்கிருந்த போது என்ன செய்தாரோ அதையே இப்போதும் செய்வார். ஜனங்களுடைய விசுவாசம் அவருடைய வஸ்திரத்தைத் தொடும். அப்போது அவர் திரும்புவார். கிணற்றினடியில் அந்த ஸ்திரியினிடமும் மற்ற இடங்களிலும் அவர் செய்த விதமாகவே அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்துக் கொண்டார். இப்போது நீங்கள், "அவர் என்னை சுகப்படுத்துவாரா?” என்கிறீர்கள். 167. அவர் அதை ஏற்கனவே நிறைவேற்றி விட்டார் என்று அவருடைய வார்த்தை கூறுகிறது. அவர் இங்கே இருக்கிறார் என்று அவரை வெளிப்படுத்திக் காண்பிக்க வேண்டியதே காரியமாக இருக்கிறது. 168. ஹாப்மன்னின், "முப்பத்தி மூன்று வயதில் கிறிஸ்துவில் சிரசு” படத்தில் உள்ள அதே வடிவில் மாம்ச சரீரத்தில், கையிலிருந்து ரத்தம் ஒழுகிக் கொண்டும் ஆணியடித்த அடையாளங்களோடும் இப்போது இங்கே அவர் தரிசனம் தந்தால் அதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். இல்லை. இல்லை. இல்லை. இல்லை: அவர் தாமே வரும் போது "கண்கள் யாவும் அவரைக் காணும். நாவுகள் யாவும் அவரை அறிக்கையிடும். மின்னல் கிழக்கிலிருந்து மேற்குவரை பிரகாசிக்கிறது போல அவ்விதமாகவே இருக்கும்” பாருங்கள். மதம் சம்பந்தப்பட்ட நம்பிக்கை கொள்கைகளையோ அல்லது அப்படிப்பட்டவர்களையோ நாங்கள் நம்புவதில்லை. தேவன் வார்த்தையாக இருக்கிறார் என்றே விசுவாசிக்கிறோம். 169. ஆனால் அவர் உங்களுடைய சரீரத்தையும் என்னுடைய சரீரத்தையும் எடுத்து தம்மை (நமக்குள்) உருவாக்கிக் கொண்டு உங்களுக்கு வரங்களை அளித்து, எனக்கு வரங்களை அளித்து, இந்த வரங்கள் மூலம் தம்மையே வெளிப்படுத்திக் காண்பிக்கிறார். அதுதான் ரகசியமான ஆகாரம். அவர் என் மூலமாக எவ்வளாய் தம்மை வெளிப்படுத்திக் காண்பித்தாலும் நீங்கள் அதை விசுவாசிக்க வேண்டும். அதை விசுவாசிப்பதற்கு விசுவாசம் என்னும் வரத்தை நீங்கள் பெற்றிருக்க வேண்டும். அதை விசுவாசிக்கிறீர்களா? இப்போது அவர் அவ்விதமாகவே தம்மை வெளிப்படுத்தினால், அவரை முழு இருதயத்தோடும் விசுவாசிப்பீர்களா? அவரை விசுவாசிக்கிறீர்களா? ஓ, அவருக்காக காத்திருப்பது, அவர் என்ன செய்யச் சொல்கிறார் என்பதைக் காணக் காத்திருப்பது எவ்வளவு அற்புதமாக இருக்கிறது. 170. இதோ இங்கே ஒரு மனிதர் இருக்கிறார். எனக்குத் தெரிந்து, நான் இதுவரை என் ஜீவியத்தில் அவரைப்பார்த்ததே கிடையாது. நல்ல பலசாலியாக, ஆரோக்கியமான மனிதராக காணப்படுகிறார். ஒரு வேளை அவர் அவ்விதமாகவே இருக்கலாம். நான் அறியேன். அவர் அங்கே நின்று கொண்டிருக்கிறார். இப்போது அவர் மீது கைகளை வைத்து ஜெபிக்கும்படி நான் அவரிடம் சென்று, அவர் விசுவாசிக்கிறாரா என்று கேட்கலாம். அதற்கு அவர், "இன்னொருவருக்காக நீர் ஜெபிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனக்கு தொடர்ச்சியாக தலைவலி இருக்கிறது. வயிற்றிலே குடல்புண் இருக்கிறது.” அல்லது வேறு ஏதாவது என்பார். அவர்.......... எனக்குத் தெரியாது. இவைகளில் ஏதாவது ஒன்றை அவர் சொல்லக்கூடும். 171. நான், "நல்லது ஐயா, சகோதரனே, நான் உன் மீது கைகளை வைத்து உனக்காக ஜெபிக்கிறேன்" என்று சொல்வேன். அது முற்றிலுமாக சரியாகவே இருக்கும். நாம் இத்தனை காலமாக அதையேதான் செய்துக் கொண்டு வந்தோம். அது சரியா? 172. ஆனால் அவருடைய வருகையின் சமயத்தில் அது வித்தியாசமாக இருக்கும். சோதோமின் நாட்களில் இருந்தது போல என்று இயேசு கூறியிருக்கிறார். (ஆபிரகாமிடத்தில்) வந்த மனிதர் சாராள் இருந்த கூடாரத்தின் பக்கம் தன் முதுகைக் காட்டியபடி இருந்து “ஆபிரகாமே” என்றழைத்தார். ("ஆபிராம்” என்றல்ல) 173. பாருங்கள். அதற்கு முந்தின தினத்தில் ஆபிராம் என்று இருந்தது. ஆனால் அவன் ஒரு தரிசனம் கண்டான். கர்த்தர் அவனிடம், "உன் பெயரை மாற்றப் போகிறேன்” என்றார். 174. இதோ கர்த்தர் தாமே மனித உருவில், அவனோடு புசித்துக் குடித்து, "ஆபிரகாமே, உன் மனைவியாகிய சாராள் எங்கே?” என்றார். சாரா அல்ல சாராள். "அவள் உமக்குப் பின்புறம் கூடாரத்தில் இருக்கிறாள்” என்றான். 175. "இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு நான் தந்த என் வாக்குத்தத்தின்படி நான் உன்னிடத்தில் வருவேன்” என்றார். 176. அப்போது சாராள் தனக்குள்ளே நகைத்தாள். அவர், "இந்தக் காரியங்கள் எப்படியாகும்" என்று சொல்லி சாராள் கூடாரத்தில் நகைத்தாளோ? என்றார். தேவனுக்கு கடினமான காரியம் ஏதாவது உண்டா, பாருங்கள்? ஒன்றுமில்லை. இல்லை, ஐயா, 177. "வார்த்தையாகிய அவர் (மனுஷகுமாரன், அதை விசுவாசிக்கிறீர்களா?) கடைசி நாட்களில் வருவார். உலகமானது சோதோம் கொமோராவைப் போலவே இருக்கும் சமயத்தில் அவர் தம்மை வெளிப்படுத்துவார்” என்று இயேசு வாக்குரைத்திருக்கிறார். அது சரிதான் என்று விசுவாசிக்கிறீர்களா? 178. நாம் ஒரு ஜெபத்தை செய்யும் முன்பாக, அங்கிருப்பவர்களில் யாராவது ஒருவர் ஜெபித்து, மனுஷகுமாரன் இன்னமும் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராகவே இருக்கிறாரா என்று பாருங்கள். அவர் அவ்விதமாகவே இருக்கிறாரா என்று அவரைக் கேளுங்கள். அவர் அவ்விதமாகவே இருப்பதாகக் கூறினால், "ஆண்டவரே, அந்த மனிதன் என்னை அறியவில்லை. ஆனால் நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்று அறிவேன்" என்று சொல்லுங்கள். ஆம் ஐயா சிறிது நேரம் உங்கள் தலைகளை உயர்த்துங்கள். 179. அது எனக்குப் பின்னாக இருக்கிறது. அது ஒரு பிள்ளை (Child). அதற்கு காய்ச்சலினால் அனல் பறக்கிறது. அவள் ஒரு சிறுமி. பட்டணத்திற்கு வெளியே இருந்து வந்திருக்கிறாய். அந்தப் பிள்ளைக்கு வயிற்றுக் கோளாறு இருக்கிறது. விசுவாசி. 180. தாம் செய்யப் போவதாக அவர் சொன்னது இதுதானா? அந்த ஆளை என் வாழ்க்கையில் பார்த்ததே கிடையாது. பரலோகத்தின் தேவன்ே அதை அறிவார். 181. இங்கே இருக்கும் இந்த மனிதன் மிகவும் பலசாலியாகவும், ஆரோக்கியமாகவும் காணப்படுகிறார். ஆனால் அவர் மீது இருக்கும் நிழலைப் பாருங்கள். அது என்னவெனில், தேவன் அவருக்கு உதவாவிட்டால் அவர் வெகுகாலம் இங்கே இருக்கமாட்டார். உனக்கு நுரையீரலில் புற்றுநோய் இருக்கிறது. (இப்போது மனுஷகுமாரன் இங்கே இருக்கிறார்). ஒரு சிறு பையனை, ஒரு சிறு பிள்ளையைக் குறித்த பாரம் அவர் இருதயத்தில் இருக்கிறது. அது சரியா? அந்தப் பிள்ளையினிடம் என்ன குறை என்று தேவன் எனக்குத் தெரிவிப்பார் என்று நம்புகிறாயா? அவரால் முடியும். வலிப்பு வியாதியின் ரூபத்தில் கருமை அவனிடம் இருக்கிறது. மிகவும் சமீபத்தில் தான் ஒரு துடிப்பு அவனுக்கு வந்தது. அது சரி. இன்று காலையிலேயே அவன் நலமடைவான் என்றும் அவனை வளர்க்க நீ ஜீவனோடு இருப்பாய் என்றும் விசுவாசிக்கிறாயா? 182. சார்லி காக்ஸ் எங்கே இருக்கிறார்? அவர் எங்கே இருக்கிறார்? சார்லி, நீ எங்கே இருக்கிறாய்? இன்றிரவு இவர் இங்கே இருக்கிறார் என்று நினைத்தேன். இதோ இங்கே சார்லி, கேரி (Gary) நீ எங்கே இருக்கிறாய்? லாரி இங்கே இருக்கிறானோ? அவனுடைய சிறு பையனுக்கு இதே தான், சரியாக இதே தான் இருந்தது. லாரி நீ எங்கே இருக்கிறாய்? ஒரு நிமிஷம் இங்கே வா நல்லது. நீ இங்கே இருக்கிறாய். இங்கே இருக்கும் இந்த சிறு பையனுக்கு இதேதான் இருந்தது. இவனுடைய தகப்பனாரும், தாயாரும் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்கள். நான் சில வருஷங்களுக்கு முன்பு அங்கு இருந்தபோது அவனுக்கு கருமையான நிழல் வந்து பிறகு மறைந்து விடும். அதுதான் வலிப்பு வியாதி. இந்தப் பையனிடத்தில் நான் கண்டபோது அவனை சுகப்படுத்தும்படி தேவனிடத்தில் விண்ணப்பித்தேன். அதிலிருந்து ஒருமுறை கூட அவனுக்கு அது வரவில்லை. அவனுடைய தகப்பனாரும், தாயாரும் இங்கே எங்கேயோ உட்கார்ந்திருக்கின்றனர். அந்தப் பையனே இங்கே இருக்கிறான். (இப்போது விசுவாசிக்கிறீரா, ஐயா?) நன்றி, லாரி. 183. ஐயா, அதை விசுவாசிக்கிறீர்களா? பரலோகத்தில் தேவன் தாமே அதையே உமக்கும் தந்தருள்வாராக. நீரும் அந்தப் பிள்ளையை வளர்க்க ஜீவிப்பீர். தேவன் உங்களை ஆசிர்வதிப்பார். ஜெபம் செய்வோம். 184. அன்பான தெய்வமே, அவருக்கு உதவும், உம்முடைய இரக்கமும், கிருபையும் அவர் மீது இருந்து அவரை ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறேன். இயேசுவின் நாமத்தினாலே. 185. லூயிசியானாவுக்குத் திரும்பிச் சென்று, சந்தோஷத்தோடு அவனுக்காக தேவனைத் துதியும். 186. ஓ, ஆமாம், அவர் லூசியானாவிலிருந்து வந்திருக்கிறார். நிச்சயமாக சார்லஸ் ஏரி அருகில் சரிதான் பாரும். உம்முடைய எண்ணங்களை இப்போது என்னால் பிடிக்கமுடியும். ஆமாம். தேவனுக்குத் துதி உண்டாவதாக 187. நல்லது. நீ ஒரு நல்ல காரியத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறாய். ஒரு குழந்தை வேண்டும் என்று விரும்புகிறாய் உனக்கு ஏற்கனவே பிள்ளைகள், இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். இருந்தும் இன்னும் ஒன்று வேண்டும் என்று விரும்புகிறாய். சகோதரியே பரலோகத்தின் தேவன் தாமே அதை உனக்குத் தந்தருள்வாராக. என் கைகளை வைக்க விரும்புகிறேன் இங்கே வா. 188. அன்பான தேவனே. இந்த ஸ்தீரிக்கு அவள் இருதயத்தின் விருப்பத்தைத் தந்தருளும். ஏனென்றால் அது நியாயமான ஒன்றாக இருக்கிறது. இயேசுவின் நாமத்தில். ஆமென். இப்போது போகலாம். குழந்தையை பெற்றுக் கொள். 189. தேவன் நல்லவராகவே இருக்கிறார். அதை விசுவாசிக்கிறீர்களா? நம்முடைய தேவை எல்லாவற்றையும் அவர் அறிந்திருக்கிறார். அதை விசுவாசித்தால், நம்முடைய ஒவ்வொரு தேவையையும் அவர் தருகிறார். "நீங்கள் விசுவாசித்தால் எவ்வளவு நலமாய் இருக்கும்” என்று அவர் கூறியிருக்கிறார். 190. எங்கேயோ உம்முடைய கரத்தை குலுக்கியிருக்கிறேன். அது எங்கு என்று நினைவில்லை. ஆனால் எங்கேயோ உம் கரத்தை குலுக்கியிருக்கிறேன். சரியாக நினைவில்லை. ஆனால் நாம் எங்கேயோ, இன்று எங்கேயோ, எங்கு என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அது எங்கே என்பதற்காக நாம் பேச இங்கு வரவில்லை. நீர் இங்கே இருப்பது ஜெபிப்பதற்காக, வேறு ஒருவருக்கு நான் ஜெபிக்க நீர் விரும்புகிறீர். அது சரிதான். அவர் இங்கில்லை . ஜார்ஜியாவில் சுகவீனமாக இருக்கிறார். அவர் இந்தப் பிரகாரமாக மாத்திரமல்ல. ஆவியின்படியும் சுகவீனமாக இருக்கிறார். உம்முடைய உறவினன் (Cousin). நீர் அவருக்காக இருப்பதால் தேவன் அதை பொறுப்பெடுத்துக் கொள்வார் என்று விசுவாசிக்கிறீரா? விசுவாசிக்கிறீரா? இங்கே வாரும், நாம் சேர்ந்து ஜெபிப்போம். 191. அன்பான தேவனே, இவர் போய் அந்த மனிதன் தேவனுக்காகக் கதறிக் கொண்டிருப்பதைக் காணும்படியாக அவருடைய இருதயத்தின் விருப்பத்தைத் தந்தருளும். இயேசுவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறேன். ஆமென்.தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. சந்தேகப்படாமல் முழு இருதயத்தோடும் விசுவாசியும். 192. எப்படி இருக்கிறீர்? நீர் உம்முடைய கரத்தை நீட்டிய போது கைகுலுக்குவதற்காக நான் என் கரத்தை நீட்டவில்லை. ஒன்றை கவனித்துக் கொண்டிருந்தேன். அது ஒரு நிழல், இருளான ஒரு கருமை. அதன் காரணமாகத்தான் கண்டுபிடிக்க உம்முடைய கரத்தைப் பிடித்தேன். ஆனால் புற்றுநோய் தேவன் அதை நீக்கவல்லவர் என்று விசுவாசிக்கிறாயா? உம்முடைய நெஞ்சில் இடது பக்கத்தில் இருக்கிறது. லினாவுக்குத் திரும்பிச் சென்று, சுகமடைந்ததற்காக தேவனை துதிக்க விரும்புகிறீர். இல்லையா? நான் என்ன சொல்லுகிறேன். புரிகிறதா? நாம் ஜெபிப்போம். 193. அன்பான தெய்வமே, இப்போது பிரசன்னமாக இருக்கும் இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே, தேவனுடைய அப்பத்தை பிள்ளைகள் புசித்துக் கொண்டிருக்க, இந்தப் பிள்ளையையும் இவருடைய சொஸ்தத்திற்காக தேவன் அருளும் விசுவாசம் எனும் (தேவ) அப்பத்தை அனுபவித்துப் புசிக்கட்டும். இதனால் சென்று சுகமடைவாராக. இயேசுவின் நாமத்திலே. ஆமென். தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. சகோதரனே. உம்முடைய முழு இருதயத்தோடும் விசுவாசியும். எப்படி இருக்கிறீர்? 194. இது அற்புதமான நேரமாக இருக்கிறதல்லவா தெய்வீக பயம் ஒன்று மக்களின் மீது அமர்வது போல காணப்படுகிறது. ஏதோ போவது போல அது என் காதுகளில் ஒலி எழுகிறது. (சகோதரன் பிரான்ஹாம் பலமான காற்று பாய்ந்து செல்வது போல "மைக்”கில் ஊதுகிறார் - பதிப்பாசிரியர் "ஹுஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஷ் ” என்பது போல ஒரு சத்தத்தை எழுப்புகிறது. பாருங்கள். இது பிள்ளைகளுடைய அப்பம். பாருங்கள். அது உங்களுடையது. அது உங்களுக்கே. அது எனக்காக உங்களுக்கே. இந்த நேரத்தில் நான் மிகவும் நன்றியுடையவனாக இருக்கிறேன். நான். ... (இங்கு 1 I don't ... ) என்று தொடங்கி நிறுத்தி விடுகிறார். - தமிழாக்கியோன்) நான் அறிந்த வரை நலமுடன் இருக்கிறேன். எனக்குத் தேவைப்படும் போது எனக்கும் அப்பமாக இருக்கிறது. அது உற்சாகமாகவே இருக்கிறது. சுகவீனமாக இராத உங்களுக்கு அது நம் இருதயங்கள் தேவனுக்கு முன்பாகக் கொண்டு வருகிறது. 195. அவர் என்ன செய்வதாகக் கூறினாரோ அந்தப் பின் காலமாகவே இது இருக்கிறது. "சோதோமின் நாட்களில் இருந்தது போல மனுஷகுமாரன் வருகையிலும் இருக்கும். அப்போது மனுஷகுமாரன் வெளிப்படுத்தப்படுவார்.” பாருங்கள், "இதோ கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன். அவன் மக்களுடைய இருதயத்தை பிள்ளைகளிடம் திருப்புவான்.” பாருங்கள்? பாருங்கள்? 196. "பின்பு நீதிமான்கள் துன்மார்க்கருடைய சாம்பல் மீது நடப்பார்கள்” பூமியானது சூரியனைப்போல எரியும் பாருங்கள். அதோ அங்கே அது விழப்போவதை நாம் காணப் போகிறோம். எரிமலை பூமி முழுவதும் பரவும். வானங்கள் அக்கினியால் எரியும். ஓ, காலங்களின் பர்வதமே, இப்போதும் எப்போதும் என் மீது இரக்கமாய் இரும்.” 197. எப்படி இருக்கிறாய்? ஒரு காரியம். உனக்கு பெண்மைக்குரிய கோளாறு இருக்கிறது. மற்ற காரியங்களும் இருக்கின்றன. நரம்பு சம்பந்தப்பட்ட வியாதி இருக்கிறது. அது வரக்கூடியது தான்' பலவித தொல்லைகள். ஆனால் உனக்கொரு வாஞ்சையும் இருக்கிறது. அதாவது பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று, அது சரிதான். எல்லாவற்றையும் அறிக்கை விட்டு விட்டாயா? நான் உன் மீது கைகளை வைத்து தேவனை நோக்கி விண்ணப்பித்தால் பரிசுத்த ஆவி வரும் என்று விசுவாசிக்கிறாயா? அதை விசுவாசிக்கிறாயா? நாம் ஜெபிப்போம். 198. அன்பான தேவனே, அப்போஸ்தல் முறைமையின்படி, இந்த ஸ்திரீயின் மீது என் கைகளை வைத்து அவள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அவள் அதைப் பெற்றுக் கொள்வாளாக. ஆமென். 199. அதை சந்தேகிக்காதே. அது உனக்குரியது. பார். அது உன்னுடையது. அது பிள்ளைகளின் அப்பம். 200. "பெண்மைக்குரிய கோளாறு” என்று நான் சொன்ன போதே சற்று வேடிக்கையான உணர்வை அடைந்தாய் அல்லவா? ஏனெனில் உனக்கு அதுவும் இருக்கிறது. நீ நன்றாக ஆகிவிடுவாய் என்று இப்போது விசுவாசிக்கிறாயா? கர்த்தரை ஸ்தோத்தரித்து செல். 201. எப்படி இருக்கிறாய்? முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறாயா? வெகுநாட்களுக்கு முன்பு சாப்பிட்டதைப் போல இப்போது உன்னால் சாப்பிட முடியும் என்று விசுவாசிக்கிறாயா? அல்லது "உமக்கு ஸ்தோத்திரம் கர்த்தாவே, நான் அதை விசுவாசிக்கிறேன்” என்று கூறியபடி செல். கர்த்தருடைய பிரசன்னம். 202. உன் முதுகுவலி உன்னை விட்டு நீங்கி, நீ சுகமடைவாய் என்று விசுவாசிக்கிறாயா? நல்லது. "அன்பான தேவனே, உம்மைத் துதிக்கிறேன்.” என்று கூறியபடி செல். தேவன் நன்மையானதைத் தந்தருள்வார். 203. நீ நலமடைவாய் என்றும், கர்த்தர் உன்னை சுகமாக்குவார் என்றும், மூட்டுவலி இனி இராது என்றும், சுகமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பாய் என்றும் விசுவாசிக்கிறாயா? அதை விசுவாசிக்கிறாயா? அவரை ஸ்தோத்தரித்து, "கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் ஏற்றுக் கொள்கிறேன், அதை விசுவாசிக்கிறேன்.” என்று கூறியபடி செல். இங்கு இருக்கும் நீங்கள் அனைவரும் அதை விசுவாசிக்கிறீர்களா? 204. இங்கே இருக்கும் நீ உனக்கு அடுத்து அமர்ந்திருக்கும் ஸ்தீரியின் மீது கைகளை வைத்து, அவள் விசுவாசித்தால் அவளுடைய நரம்பு வியாதியும் (varicose veins) மூட்டு வியாதியும் அவளை விட்டு நீங்கி விடும் என்று கூறு. 205. கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக. இப்போது நலமடைவாய் என்று விசுவாசிக்கிறாய். வீட்டிற்குச் சென்று (சுகமாய்) இரு. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. உன் பாதையில் சென்று, "கர்த்தராகிய இயேசுவே, உமக்கு ஸ்தோத்திரம்” என்று சொல். 206. எப்படி இருக்கிறாய்? பெண்மைக்குரிய இந்த கோளாறு உன்னை விட்டு நீங்கும் என்றும், நீ சுகமடைவாய் என்றும் விசுவாசிக்கிறாயா? "உம்மை ஸ்தோத்தரிக்கிறேன் கர்த்தாவே” என்று கூறியபடி செல். 207. எப்படி இருக்கிறாய்? ஓ உன் பெயர் எனக்குத் தெரியும் பாப்டிஸ்ட் சபையில் நான் மேய்ப்பனாக இருந்த போது....... டோடின், சகோதரி டில்லி டோடின் (St.Dilly Toddin) நீ இப்போது முதுகு வலியினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறாய். அது குணமாகி விடும். அவர் உன்னை சுகப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறாயா? சில ஆண்டுகளுக்கு முன்பு மில் டவுன் (Mill Town) பாப்டிஸ்ட் சபையில் என்ன நடந்தது என்று உனக்கு நினைவிருக்கிறதா? இன்றும் அவர் அதே தேவனாகவே இருக்கிறார். கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக. (ஜார்ஸ் ரைட் எங்கே இருக்கிறீர்? உமக்கு நினைவிருக்கிறதா?) ஓ இந்த அபிஷேகத்துடன் நான் உன் மேல் கைகளை வைக்கும் போது நீ சுகமடைவாய் என்று விசுவாசிக்கிறாயா? இங்கே வா. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே இவள் சுகமடைவாளாக. ஆமென். விசுவாசமாயிரு. நல்லது. நீங்கள் எல்லோரும் உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? 208. இப்போது இந்தப் பெண்மணியைப் பார்ப்பது எவ்வளவாக பழைய நினைவுகளைத் திரும்பக் கொண்டு வருகிறது. இவளுடைய பெயர் எனக்கு இன்னும் நினைவிற்கு வரவில்லை . ஆனால் நான்............ டோடின் - டோடின். அது சரிதான். ஓ. ...... ஆமாம். அவளுடைய மகள் கெர்டி (Gertie) அது சரிதான். அது முற்றிலும் சரியாக இருக்கிறது. நான் என் நிலையில் இல்லை என்று நினைத்து விடாதீர்கள். நான் சற்று, உங்களுக்குத் தெரியும். ஒருவித .......... என்னால் அதை விவரித்துக் கூற முடியவில்லை . 209. ஆனால் பெண்மணியே, உன் முதுகுத் தொந்தரவு நீங்கி விட்டது. "உம்மைத்துதிக்கிறேன், கர்த்தாவே” என்று கூறியபடி ஸ்தோத்தரித்துக் கொண்டு செல். 210. உன் இருதயக் கோளாறும் குணமாகிவிடும் என்று விசுவாசிக்கிறாயா? "உமக்கு ஸ்தோத்திரம், கர்த்தராகிய இயேசுவே" என்று கூறியபடி, களிகூர்ந்து செல். அதை விசுவாசி. நல்லது இப்போது விசுவாசத்துடன் இரு. சந்தேகப்படாதே. 211. பெண்மணியே, வா உன் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறாயா? உன்னிடத்தில் அநேக குறைகள் இருக்கின்றன. உனக்கு முதுகு வலியும் இருக்கிறது. தேவன் உன்னை சுகமாக்குவார் என்று விசுவாசிக்கிறாயா? நல்லது. களிகூர்ந்து செல். அவரே உன்னை அவ்விதமாக உணர வைக்கிறவர். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். 212. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. சகோதரியே மகளே, தேவன் இந்தப் பிள்ளையின் நரம்பு வியாதியை குணமாக்கி சுகப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறாயா? அதை விசுவாசிக்கிறாயா? நல்லது. சிறுவனே, நான் உன் கையைக் குலுக்கட்டும். 213. அன்பான தேவனே, இந்த சிறு பையனில் இருந்து அந்தத் தீமையான காரியத்தை எடுத்துப் போடும். இவன் ஜீவிப்பானாக. பழைய நிலைமைக்கு வருவானாக. இயேசுவின் நாமத்தினாலே. ஆமென். 214. சகோதரனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அதை விசுவாசிக்கிறாய் இல்லையா? அவன் சுகமடைவான். சந்தேகமே கொள்ளாதே. 215. இருதயக்கோளாருடன் இருக்கும் இளம்பலசாலியே, தேவன் உன்னை சுகப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறாயா?" "என்னை சுகப்படுத்தினதற்காக, கர்த்தாவே, உமக்கு ஸ்தோத்திரம்” என்று கூறியபடி செல். 216. தேவன் வயிற்றுக் கோளாறை நீக்கி உன்னை குணமாக்குவார் என்று விசுவாசிக்கிறாயா, "உமக்கு ஸ்தோத்திரம், கர்த்தாவே” என்று கூறியபடி களிகூர்ந்து செல். 217. அவர் இன்னமும் தேவனாகவே இருக்கிறார். இல்லையா, நீ செய்ய வேண்டிய ஒரே காரியம் என்னவென்றால் விசுவாசிப்பதுதான். அது சரியாக இல்லையா, கடைசி நாட்களிலே மனுஷ குமாரனை விசுவாசிக்கிறாயா? 218. இங்கு சில நிமிஷங்களுக்கு முன்பு ஏதோ சம்பவித்தது. நான் அது எங்கு நடந்தது என்று கண்டறிய முயற்சிக்கிறேன். யாரோ விசுவாசத்துடன் இருந்து ஏதோ செய்து விட்டார்கள். அவர்கள் யார் என்று அடுத்த ஞாயிற்றுக்கிழமையோ அல்லது என்னால் எப்போது முடியுமோ அப்போது கூறுகிறேன். நீ-நீ . . . . அதோ மீண்டும் வந்திருக்கிறது. உன் கையை உயர்த்தியிருக்கிறாய். தேவன் உன் இருதயக் கோளாறை குணமாக்கி உன்னை சுகப்படுத்துவார் என்றும், அதோ அங்கே...........யுடன் இருக்கும் உன் மகளையும் சுகப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறாயா? அதை விசுவாசிக்கிறாயா! திருமதி. நெப், நீ விசுவாசிக்கிறாயா, தேவன்... லியோ நெப். நீ யார் என்று எனக்குத் தெரியாது, ஆனால் நீ அதுதான், உனக்கு இருதயக்கோளாறு இருக்கிறது. உன் சிறிய மகளுக்கு குண்டிக்காய் கோளாறு இருக்கிறது. அவள் சுகமடைவாள் என்று விசுவாக்கிறாயா? உன் விசுவாசம் உன்னை சொஸ்தப்படுத்துகிறது. உன் முழு இருதயத்தோடும் விசுவாசி. 219. அதோ குளத்தினருகில் வயிற்று வலியோடு நின்று கொண்டிருக்கும் உன்னை இயேசு கிறிஸ்து குணமாக்குவார். 220. நீ விசுவாசிக்கிறாயா? நாம் ஒருவர் மீது ஒருவர் கைகளை வைப்போம். ஓ, நாம் எந்த மணி வேளையில், எந்த நேரத்தில், எங்கே இருக்கிறோம் என்பதை நினைத்துப் பாருங்கள். மனுஷ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தில் இருக்கிறோம் என்பதை நினைத்துப் பாருங்கள். கடைசி நாட்களில் அவர் இதைச் செய்வதாக வாக்குரைத்திருக்கிறார். இந்த கைக்குட்டைகளின் மீது கைகளை வைக்கிறேன். 221. அன்பான தேவனே, ஜனங்களுடைய சரீரங்களின் சுகப்படுத்தலுக்காக இந்த கைக்குட்டைகளை தேவரீர்: ஆசீர்வதிக்க வேண்டுமென ஜெபிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே. 222. இப்போது ஒவ்வொருவருவர் மீதும் கைகளை வைத்திருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கமாக இருக்கிறீர்கள். இருதயத்தின் ரகசியங்களை வெளிப்படுத்துவதாகவும் இந்தக் காரியங்கள் எல்லாம் செய்வதாகவும் வாக்குத் தத்தம் செய்த அதே பரிசுத்த ஆவியானவர் தாமே உங்களுக்குள் இருக்கிறார். நீங்கள் அவரில் ஒரு பாகமாக இருக்கிறீர்கள். அவர் உங்களில் ஒரு பாகமாக இருக்கிறார். "விசுவாசிக்கிறவர்களால் இந்த அடையாளங்கள் நிகழ்த்தப்படும்” என்று அவர் கூறியிருக்கிறார். அது நீங்கள் தான். "அவர்கள் வியாதியஸ்தர் மீது கைகளை வைக்கும் போது அவர்கள் சுகமடைவார்கள்" இப்போது நீங்கள் உங்களுக்காக ஜெபிக்காதீர்கள், யார் மீது உங்கள் கைகளை வைத்திருக்கிறீர்களோ அவருக்காக ஜெபியுங்கள். ஏனென்றால் அவர்கள் உங்களுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள், இப்போது நாம் சேர்ந்து ஜெபிப்போம். இக்கட்டிடத்தில் பலவீனமான ஒருவரும் இல்லாதிருப்பார்களாக. நாம் இன்னும் ஏன் காத்திருக்க வேண்டும். அன்பான சகோதரனே, சகோதரியே, அது இங்கே இருக்கிறது. நாம் பேசி வந்த அதே காரியம், பரிசுத்த ஆவி, தேவன் இங்கேயே இருக்கிறார். 223. அன்பான இயேசுவே, உம்முடைய பிரசன்னத்தை அடையாளம் கண்டு கொள்கிறோம். அன்றொரு நாளில் (மரித்துப் போயிருந்த) சிறு குழந்தைக்கு விசுவாச ஜெபத்தின் மூலம் திரும்ப ஜீவன் தந்தீர். அன்பான தெய்வமே, நாங்கள் ஒவ்வொருவரிடமும் செல்ல முடியாதபடி அதிகமான பேர் இங்கே இருக்கின்றனர். நேரமோ கடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அவர்கள் ஒருவர் மீது ஒருவர் கைகளை வைத்திருக்கின்றனர். அவர்கள் விசுவாசிகள். மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து, நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராக இருக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தில் நாங்கள் அமர்ந்திருக்கிறோம். | 224. சாத்தானே, நீ தோற்கடிக்கப்பட்டு விட்டாய்! இயேசு கிறிஸ்து உன்னைத் தோற்கடித்து விட்டார்! அவர் மரித்தோரிலிருந்து உயிர்தெழுந்து, இன்றிரவு எங்கள் மத்தியில் நின்று கொண்டு, இந்தக் கடைசி நாளின் செய்தியை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்த ஜனங்களை விட்டு வெளியே வா! இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, அவர்களைவிட்டு விலகு! "என்னுடைய நாமத்தினாலே அவர்கள் பிசாசுகளைத் துரத்துவார்கள்”, இதோ நீ துரத்தப்பட்டு விட்டாய்! இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே இந்த சபையாரை விட்டு விலகு! 225. சுகப்படுத்தலை பெற்றுக் கொண்ட நீங்கள் ஒவ்வொருவரும் எழுந்து நில்லுங்கள். சுகப்படுத்தலை பெற்றுக் கொண்ட ஒவ்வொருவரும் எழுந்து நில்லுங்கள். இப்போது உங்கள் கைகளை உயர்த்தி அவருக்கு ஸ்தோத்திரத்தை ஏறெடுங்கள். "என் சுகப்படுத்தலை இப்போதே நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று தேவனிடம் கூறுங்கள். "என் சுகப்படுத்தலை நான் இப்போது ஏற்றுக் கொள்கிறேன். கிறிஸ்துவே, நீர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராய் இருக்கிறீர். இப்போது நான் உம்மை விசுவாசிக்கிறேன். என் அவிசுவாசம் நீங்க உதவி செய்யும்” ஆமென். நான் அவரைத் துதிப்பேன், நான் அவரைத் துதிப்பேன். பாவிகளுக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவரைத் துதிக்கிறேன்: ஜனங்களே, நீங்கள் எல்லோரும் அவருக்கு மகிமை செலுத்துங்கள். ஏனெனில் அவரது இரத்தமே ஒவ்வொரு கறையையும் கழுவிற்று. 226. நீங்கள் அவரை நேசிக்கிறீர்கள் அல்லவா, அப்படியானால் அவரைத் துதிப்போம். ஓவ்வொருவரும், உங்கள் கரங்களை உயர்த்தி அவருக்கு துதி செலுத்துங்கள். இப்போது சகோதரர் இங்கே நம்மை வழிவிட்டனுப்புவார். 48